என் மகன்.. அறிமுகம் செய்த வரு!

Published:

varu2
varu2

பிரபல நடிகை வரலட்சுமி தனது மகனை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி.

இதை தொடர்ந்து கதாநாயகியாகவும், வில்லியாகவும் பல வேடங்களில் துணிச்சலாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை வரலட்சுமியிடம் காட்டேரி, கலர்ஸ், யானை,பாம்பன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் கைவசம் உள்ளது.

இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அந்த வகையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வபோது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி தான் செல்லமாக வளர்க்கும் நாய் குட்டியை தனது மகன் எனக் கூறி அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சியை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img