
விருதுநகர் மாவட்டத்தில் மனைவி தனது 2 குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை காவல்துறையினர் விசாரணை.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் வயது 31 கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவருடைய மனைவி செல்வி வயது 26 அனுஷ்கா என்ற 5 வயது மகளும் மாதேஷ் என்கின்ற மூன்று வயது மகன் உள்ள நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனைவி மனவருத்தில் இருந்தாக கூறபடுகிறது. இதையடுத்து மனைவி செல்வி நேற்று தன்னுடைய குழந்தைகளை காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் யாருக்கும் தெரியாமல் தனது 2 குழந்தைகளும் தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அடுத்து கிணற்றுப் பகுதி வழியாக சென்ற கிராம மக்கள் கிணற்றில் மூவரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் உடனடியாக சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் உடல்களை மீட்டனர்.
பிறகு கைப்பற்றிய உடல்களை பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சாத்தூர் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவன் இறந்த நிலையில் மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.