April 30, 2025, 11:04 PM
30.5 C
Chennai

நோயாளி போல் நடித்து விமானத்தில் 70 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் கடத்தல்!

Smuggling
Smuggling

தோகாவில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்கு வருவதுபோல் நடித்து 70 கோடி போதைப் பொருட்கள் கடத்தி வந்த 2 வெளிநாட்டு பெண்கள் விமான நிலையத்தில் பிடிபட்டனர்.

வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு பெரிய அளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் நேற்று முன்தினம் இரவிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திவீர கண்காணிப்பில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து சிறப்பு பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது ஒரு வெளிநாட்டு பெண் பயணியை சக்கர நாற்காலியில் வைத்து மற்றொரு வெளிநாட்டு பெண் தள்ளிக்கொண்டு வந்தார். ஆனால், அந்த சக்கர நாற்காலியில் இருந்த சுமார் 45 வயது பெண் உடல்நலம் பாதித்தவர்போல் தெரியவில்லை.

ALSO READ:  ஸ்டாலினின் கச்சத்தீவு நாடகம்!

இதனால், சந்தேகமடைந்த சுங்கத்துறையினர், அப்பெண்களை நிறுத்தி விசாரித்தனர். அதில், சக்கர நாற்காலியில் வந்த பெண் ஜிம்பாவே நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவர் சிகிச்சைக்காக மருத்துவ விசாவில் சென்னை வந்ததும் தெரிந்தது.

சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்த சுமார் 30 வயது பெண் தெற்கு ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்தவர் என்பதும், ஜிம்பாவே பெண்ணுக்கு மருத்துவ உதவியாளராக அவரும் மருத்துவ விசாவில் வந்ததும் தெரிந்தது.

ஆனால், அவர்கள் சென்னையில் எந்த மருத்துவமனைக்கு செல்கின்றனர், எத்தனை நாட்கள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர், எந்த மருத்துவரிடம் முன் அனுமதி பெற்றுள்ளனர் என்ற விவரங்கள் எதுவும் இல்லை. அதோடு சென்னைக்கு வந்து தில்லி மருத்துவமனைக்கு செல்வதாக மாற்றி மாற்றி பேசினர்.

இதையடுத்து சுங்கத்துறையினருக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து இரு வெளிநாட்டு பெண்களையும் தனி அறைக்கு அழைத்து சென்று பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன் சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் வைத்திருந்த டிராலி சூட்கேஸ், பைகளில் மொத்தம் 10 கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு 70 கோடி. இதையடுத்து சுங்கத்துறையினர் இருவரையும் கைது செய்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ALSO READ:  மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

மேலும், இவர்கள் சென்னையில் யாரிடம் கொடுக்க இந்த போதைப் பொருட்களை கொண்டு வந்தனர். இவர்கள் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்து கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தவறைத் தவிர வேறெதுவும் செய்யாத அமைச்சரவையின் முதல்வர்!

தவற்றைத் தவிர வேறொன்றும் செய்யாத ஒட்டு மொத்த அமைச்சரவையின் முதல்வராக இருக்கும் உங்களுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

Entertainment News

Popular Categories