மோர் தீண்டிய உதட்டை நான் தீண்டவா..? இளம்பெண்ணிடம் வைரமுத்து வழிசல்!

சற்றுமுன் சினிமா தமிழகம்
varamuthu
varamuthu

பாடகி சின்மயி தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கொடுத்து வருகிறார். ஆனால் யாருமே அதைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை.

இந்நிலையில் சின்மயிக்கு இளம்பெண் ஒருவர் வைரமுத்து தன்னிடம் நடந்து கொண்டதை பற்றி ஒரு பதிவை அனுப்பியதாக கூறியுள்ளார்.

அதில் ஒரு இளம்பெண் ஒரு முறை வைரமுத்துவிடம் வேலைக்காக சென்றிருந்தாராம்.

அன்றே மறுபடியும் வைரமுத்துவை சந்திக்க வேண்டியதாயிற்று. இதனால் மீண்டும் அவரது அலுவலகத்திற்குச் சென்ற போது மோர் சாப்பிடுகிறாயா என்று கேட்டாராம். இங்கு அது ரொம்ப ஸ்பெஷல் என்று சொன்னவுடன் அந்த இளம் பெண்ணும் ஓகே என கூறிவிட்டாராம்.

chinmayee
chinmayee

பிறகு மோர் அருந்திவிட்டு அந்த டம்ளரை வைக்கும் போது, கிளாஸ் தொட்ட உன் உதடுகளை நான் தொட விரும்புகிறேன் என கூறினாராம் வைரமுத்து. அதுமட்டுமில்லாமல் மோர் குடிக்கும் போது உன் உதடுகள் மிக அழகாக இருக்கிறது எனவும் வர்ணித்தாராம்.

ஒரு வயதான ஆண் இளம் பெண்ணைப் பற்றி இப்படி கூச்சமில்லாமல் வர்ணித்து பேசுவது தனக்கு ஒரு மாதிரி சங்கடத்தைக் கொடுத்ததால் அந்த இடத்திலிருந்து விலகிவிட்டேன் எனவும், தொடர்ந்து தன்னை அடைய அவர் பல வழிகளில் முயற்சி செய்ததாகவும் அந்த இளம்பெண் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார் சின்மயி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.