ஆபாச பட நடிகை மர்ம மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

உலகம் சற்றுமுன் சினிமா
Dakota Sky
Dakota Sky

அமெரிக்காவின் ஆபாச பட நடிகை டகோடா ஸ்கை அவரது குடியிருப்பில் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

டகோடா ஸ்கை கடந்த மாதம் ஜார்ஜ் ஃபிளாய்டின் ஓவியத்துக்கு முன்னதாக டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து வைரலானார்.

இந்நிலையில், டகோடா ஸ்கை எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த 27 வயது லாரன் ஸ்காட் ஆபாச படங்களில் டகோடா ஸ்கை எனும் பெயரில் நடித்து வந்தார். அமெரிக்காவின் ஆபாச பட உலகில் இவர் மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில், மர்மமான முறையில் டகோடா ஸ்கை உயிரிழந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆபாச பட நடிகை டகோடா ஸ்கை தனது அப்பார்ட்மென்ட்டில் கடந்த புதன்கிழமை உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்து போன அவரது கணவர் போலீசாருக்கு தகவல் அளிக்க சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் டகோடாவின் சடலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மினியாபோலிஸ் போலீசார் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்டு என்பவரை முட்டியிலேயே நசுக்கிக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த மே 4ம் தேதி அவரது ஓவியத்திற்கு முன் டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து வைரலானவர் டகோடா. ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவரது செயலை கண்டித்து இருந்தனர்.

மதுப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் டகோடா ஸ்கை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், இன்னமும் அவர் எப்படி இருந்தார் என்றும் அவரது மரணத்திற்கான காரணமும் வெளியாகவில்லை.

அதுமட்டுமின்றி டகோடாவின் அத்தை போலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில் டகோடாவின் தாத்தா மற்றும் பாட்டி கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் காலமானார்கள்.

அதன் பின்னர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், அடிக்கடி தனக்கு அமானுஷ்ய சத்தங்கள் கேட்பதாகவும், சில சமயங்களில் அவற்றுடன் பேசி வந்ததாகவும் தனிக்கதை ஒன்றையும் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.