
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள மூத்த நிதி அதிகாரி, டிஜிட்டல் ஆபிசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.76 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB)
பணி : Chief Financial Officer, Chief Digital Officer மற்றும் IT Technical Officers
கல்வி தகுதி :
Chief Financial Officer மற்றும் Chief Digital Officer :
Chartered Accountant பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், Overseeing financial operations, preferably accounting மற்றும் taxation பணிகளில் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றுக்க வேண்டும்.
IT Technical Officers : Computer Science / MCA / IT / Electrical / Electronics போன்ற துறைகளில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
IT Technical Officers – விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மற்ற பணிகளுக்கு 45 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.36,000 முதல் அதிகபட்சம் ரூ.76,010 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 21.06.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். வீடியோ காலின் மூலம் இத்தேர்வு நடைபெறும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tmbnet.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.