e-pass ( இ-பாஸ் ) பெற்று திருமணங்களுக்கு செல்லலாம்! எந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் தெரியுமா?!

சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
marriage in temple gate
marriage in temple gate

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பில், திருமணங்களுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இ பாஸ் பெற்றுச் செல்லலாம்.

ஒரு வார காலத்துக்கு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப் படுவதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பின் படி… தமிழகத்தில் ஜூன் 28 வரை, மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப் படுகிறது.

மாவட்டங்களை 3 வகைகளாகப் பிரித்து தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

திருமணநிகழ்வுகளுக்கு, வகை 2 மற்றும் 3-ல் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.

திருமண நிகழ்வுகளுக்கு 27 மாவட்டங்களில், மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும்

இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.  

வகை 2 – (23 மாவட்டங்கள்) : அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3-  (4 மாவட்டங்கள்) :சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.

மேற்கண்ட இரு வகைகளைச் சேர்ந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் இபாஸ் பெற்று திருமணங்களுக்குச் செல்லலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.