கொரோனா எனக்கூறி மாத்திரை விநியோகம்! ஒருவர் உயிரிழப்பு.. தீவிர சிகிச்சையில் 3 பேர்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
chennimalai - 2026

கொரோனாவை குணமாக்கும் என்று கூறி, மர்ம நபர் தந்த மாத்திரை, பெண்ணின் உயிரை பறித்தது. கணவன், மகள் உட்பட மூவர் சிகிச்சை பெறுகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சேனாங்காட்டுதோட்டத்தை சேர்ந்த விவசாயி கருப்பணன், 71; மனைவி மல்லிகா, 55; மகள் தீபா, 30; தோட்டத்தில் வேலை செய்யும் பெண் குப்பம்மாள், 65; நால்வரும் நேற்று காலை வீட்டில் இருந்தனர். காலை 8:00 மணி அளவில், 25 வயது ‘டிப்-டாப்’ ஆசாமி வந்தார்.

கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி, ஒரு கருவி மூலம் நான்கு பேரையும் சோதனை செய்துள்ளார். பின் கறுப்பு நிறத்தில் நான்கு பேருக்கு, தலா ஒரு மாத்திரை தந்தார். பின் அங்கிருந்து சென்றார். நால்வரும் அதைசாப்பிட்டனர்.

அரை மணி நேரம் கழிந்த நிலையில், நான்கு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

erode - 2026

செல்லும் வழியிலேயே மல்லிகா இறந்து விட்டார். குப்பம்மாள் ஈரோடு அரசு மருத்துவமனையிலும், கருப்பணன், தீபா கோவையில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.