கோயில் இடத்தில் மசூதிக்கு வழி! நீதிமன்ற உத்தரவை அரசு மதித்து நடக்க வேண்டும்!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
pallivasal path in temple land1 - 2026

கோவில் இடத்தை விட்டுக் கொடுக்க முடியாது..
தமிழக அரசு, நீதிமன்ற உத்திரவை மதித்து நடக்க வேண்டுகிறோம்.. என்று கூறினார் இந்து முன்னணி சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன்.

இது குறித்து இளங்கோவன் தெரிவித்ததாவது…

வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மசூதிக்கு 20 க்கு 80அடி வழி ஏற்படுத்திக் கொடுத்த செய்தி அறிந்து, நேற்று மாலை மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் நேரில் சென்று விசாரித்தோம். அதில் நேற்று முன்தினம் கோவில் நிலத்தில் சுற்று சுவர் அமைத்து இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அப்போது அங்கு உள்ள மசூதிக்குச் செல்ல எங்களுக்கு 20க்கு 80 அடி பாதை வேண்டும் என்று முச்லிம்கள் கேட்டு உள்ளனர். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மறுக்கவே, முஸ்லிம்கள், விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.க்கு தகவல் கொண்டு சொல்லி உள்ளனர்.

விருகம்பாக்கம் திமுக எம்.எல்.ஏ. வந்து மசூதிக்குச் செல்ல வழி கொடுக்கச் சொல்லி அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி, இது கோவில் சொத்து இதை கொடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று எடுத்துச் சொல்லியும், எம்.எல்.ஏ.வும் முஸ்லிம்களும் ஏற்கவில்லை

pallivasal path in temple land - 2026

மேலும் மசூதி ஒலிபெருக்கி மூலம் முஸ்லிம்களை அந்த இடத்துக்கு வருமாறு அழைத்ததும் 200க்கும் மேலான முஸ்லிம்கள் திரண்டு உள்ளனர். விருகை எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர், அமைச்சர் ஆகியோரிடம் பேசி ஒப்புதல் பெற்றதாக சொல்லப்பட்டது. பிறகு மசூதிக்கு வழி விடப்பட்டு சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம், இந்துக்களின் நூறாண்டு கால ஆலயங்கள் இடிக்கப் படுகின்றன. இன்னொருபுறம் கோயில் சொத்தினைக் கொடுக்கச் சொல்லி எம்.எல்.ஏ இந்து சமய அதிகாரியை கட்டாயப் படுத்துகிறார். கூட்டம் சேர்ந்து முஸ்லிம்கள் அச்சமூட்டி, மிரட்டி அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுக்கிறார்கள். ஆனால் வழக்கு இல்லை, கைது நடவடிக்கை இல்லை.

இந்துக்கள் உரிமைக்காகப் போராடினாலே கைது நடவடிக்கைகள் எடுக்கும் அரசும் காவல்துறையும், முஸ்லிம்கள் என்றால் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. கோவில் இடத்தை விட்டுக் கொடுத்ததற்கு இந்து முன்னணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக இதனைச் சரி செய்து சுவர் அமைக்க வேண்டும் என்றும் இலையென்றால் இந்து முன்னணி சார்பில் பொதுமக்களையும் முருக பக்தர்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது… என்று இந்து முன்னணி மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.