spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஎம்ஃபில் படிக்க விண்ணப்பிக்கலாம்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்!

எம்ஃபில் படிக்க விண்ணப்பிக்கலாம்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்!

- Advertisement -
World Tamil Research Institute

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இலவசத் தங்கும் விடுதி வசதியுடன், கட்டணமில்லாமல் எம்.ஃபில். படிக்க விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் ஆண்டுதோறும் தொடா்ந்து நடத்தப்பெற்று வருகிறது.

அந்த வகையில் 2021- 22 ஆம் கல்வியாண்டுக்கான எம்.ஃபில். பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சோக்கை தொடங்கப் பெறவுள்ளது.

மாணவா்கள் முதுநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 50 சதவீதம் மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம் ஆகியவை சேர்த்துக் கணக்கிட்டுத் தெரிவுப் பட்டியல் தயாரிக்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட மாணவா்களின் பட்டியல் உயரளவு மதிப்பெண் வரிசையில் தமிழக அரசின் இனவாரி சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

தெரிவு செய்யப்பெறும் மாணவர்கள் உரிய கல்வித் தகுதிக்கான மூலச் சான்றுகளையும் அவற்றின் ஒளிப்பட நகல்கள் (ஒவ்வொன்றிலும் இரண்டு வீதம்) எடுத்துவரவேண்டும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மாணவா்கள் சோக்கைக்கு அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பங்களை நிறுவன வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஆக.16-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் ஆகியன தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்குப் பின்னர் தெரிவிக்கப்படும். கல்விக் கட்டணம் கிடையாது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கட்டணம் இல்லாத தங்கும் விடுதி வசதி உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, ‘ இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 113, பேசி : 044-2254 2992’ என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம். சோக்கை தொடர்பான விதிமுறைகள், தகவல்களை இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe