
மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..
பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் அருகே பயங்கர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார்.
யாஷிகா ஆனந்த் சென்ற கார் நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், மற்றும் இன்னொரு தோழி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.