வலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
valimai ajith - 2026

தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக அஜித்தின் வலிமை படத்தை இயக்கி வருகிறார் வினோத்.

90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்தும் இன்னும் 10 சதவீத காட்சிகள் படமாக்கப்படாமல் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அந்த காட்சிகளை வெளிநாட்டில் தான் எடுத்தாக வேண்டிய சூழ்நிலை.

இதனை யோசித்துப் பார்த்த போனிகபூர், உடனடியாக ஒரு வாரம் படக்குழுவினரை ரஷ்யாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளாராம். மேலும் இந்த ரஷ்யா படப்பிடிப்பில் இரவு பகலாக வேலை நடக்கும் எனவும் படக்குழுவினருக்கு சொல்லி அனுப்புகிறாராம் போனி கபூர்.

இதனால் அஜித் முதற்கொண்டு படத்தில் பணியாற்றும் பலரும் ராப்பகலாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை. அதை முடித்தால்தான் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி ஆயுதபூஜைக்கு படத்தை வெளியிட முடியுமென படக்குழுவை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார் போனி கபூர்.

முன்னதாக வலிமை படம் தீபாவளியை குறி வைத்த நிலையில் அதே தேதியில் ரஜினியின் அண்ணாத்த படம் வருவதால் வசூலில் சிக்கல் ஏற்படும் என தெரிந்து அதற்கு முன்னதாகவே வலிமை படத்தை இயக்க முடிவு செய்துள்ளனராம்.

மேலும் இரண்டு வருடங்கள் கழித்து அஜித் படம் வருவதால் இந்த படத்தை மிகப் பெரிய விளம்பரம் செய்து எப்படியாவது மிகப்பெரிய வசூலை அள்ளி விட வேண்டும் என ஒரு முடிவுடன் தான் இருக்கிறாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.