கொரோனாவால் உயிரிழந்த பெண்‌.. 3 மாதங்களுக்கு பின் ஒப்படைப்பு! மருத்துவமனையின் அலட்சியம், லஞ்சம்.. உறவினர்கள் புகார்!

alamelu
alamelu

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (40). இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து கடந்த 19-05-2021 அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை பெற்று வந்த அலமேலு 22-05-21 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘கொரோனாவால் இறந்ததால் அலமேலுவின் உடலை கொடுக்க முடியாது; தாங்களே இறுதிச் சடங்குகளைச் செய்துவிடுவோம்’ என கூறி உறவினர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

மறுநாள் மருத்துவமனையில் இருந்து அலமேலுவின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு அலமேலு உடலை எரித்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து அலமேலுவின் உறவினரை தொடர்பு கொண்டு. அலமேலு உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும், நேரில் வந்து உடலை பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேற்றுசெங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையில் ஆர்.எம்.ஒ. அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மருத்துவமனையில், அலமேலுவின் உடலை காண்பிக்க ரூ.2,500 மற்றும் முகத்தை பார்க்க ரூ.500 லஞ்சம் வாங்கப்பட்டதாக அவரது உறவினர்கள் புகார்தெரிவித்தனர். இதற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் நிலையமருத்துவர் அனுபமா கூறும்போது, ”நாங்கள் அலமேலு இறந்தது தொடர்பாக காஞ்சிபுரம் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.

ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அலமேலுவின் உடலைப் பார்க்க லஞ்சம் பெற்ற விவரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

காஞ்சிபுரம் சுகாதாரத் துறையினர் கூறும்போது, ”செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம்எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

கொரோனாவால் இறந்த தகவலை தெரிவித்திருந்தால் நாங்கள் முறையாக அடக்கம் செய்திருப்போம். மருத்துவமனை நிர்வாகம் செய்த தவற்றை மறைப்பதற்காக எங்கள் மீது பழி சுமத்துகின்றனர்” என்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் முத்துக்குமாரிடம் கேட்ட போது, ”இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும் சம்பந்தப் பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories