அந்த டாக்டர்கிட்ட தான் அறுவை சிகிச்சை.. ஹைதராபாத் செல்லும் பிரகாஷ் ராஜ்!

prakashraj1
prakashraj1

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பிரகாஷ்ராஜ் அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்கிறார்.

பிரகாஷ்ராஜ் நேற்று தனது வீட்டில் சறுக்கி விழுந்த போது ஏற்பட்ட விபத்தில் காயம் அதிகம் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

அங்கு பிரகாஷ்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது என்று கூறினர். இதனையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் பிரகாஷ் ராஜ் தனது நண்பரும் டாக்டருமான ஹைதராபாத்தில் உள்ள குருவாரெட்டியவுடன் ஆலோசனை செய்ததில், அவர் அறுவை சிகிச்சை செய்வதாக சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இதை அடுத்து ஹைதராபாத்துக்கு சென்றிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

அதுகுறித்து பிரகாஷ்ராஜ், ”ஒரு சிறிய வீழ்ச்சி .. ஒரு சிறிய எலும்பு முறிவு .. ஒரு அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்கிறேன். எனது நண்பர் டாக்டர் குருவாரெட்டியின் பாதுகாப்பான கைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளவர்,

” நான் நன்றாக இருப்பேன். கவலைப்பட ஒன்றுமில்லை” என்று ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிஸியான நடிகராக இப்போதும் வலம் வருகிறார் பிரகாஷ்ராஜ். இவர் தற்போது அண்ணாத்த, கேஜிஎப்-2, பொன்னியின் செல்வன், புஷ்பா, மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories