பெரும்பான்மை ஹிந்துக்களை கோவிலுக்குச் செல்லும் நாய்கள் என கீழ்த்தரமாக பேசியும், நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு நீதிபதிகளை அவமதிப்பு செய்து கொச்சையாகப் பேசியும்,
சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் விதமாக பிரிவினைவாதிகளின் அரசியல் கூட்டத்தில் பேசிய நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த பேச்சாளர் தொழில் செய்து வரும் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.
ஏற்கெனவே பாரத பிரதமரை கொலை செய்யத் தூண்டும் விதமாக இவர் பேசியதன் மீது தொடுக்கப் பட்ட வழக்கு ஒரு வாரத்தில் இறுதி விசாரணையில் வர இருக்கிறது! இந்த நேரத்தில் மீண்டும் அதே பேச்சுகளை பேசுவதால் தற்போது ஜாமீனில் இருக்கும் இவரது ஜாமினை உடனடியாக ரத்து செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரி, நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் ஆறுமுகக் கனி தெரிவித்தார்.
அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…
பெரும்பான்மையான ஹிந்துக்களை கோவிலுக்கு போகிற நாய்கள் எனவும், மிகப்பெரிய ஆன்மீக பணிகளை செய்து வரும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடம் மற்றும் பாரம்பரிய நாளிதழான தினமலர் அதன் குடும்பம் நிர்வாகம் எழுத்தாளர்கள் என அனைவரையும் வேண்டுமென்றே கொச்சையாகவும் அவதூறுகளும், பெண்களை ஆபாசமாகவும் பேசி, நீதிமன்ற மற்றும் மாண்புமிகு நீதிபதிகள் நடவடிக்கைகளை கேலி செய்தும் அவதூறுகளைப் பேசியும் கொச்சைப்படுத்த வேண்டுமென்றே சினமூட்டி அதன் மூலம் கலவரம் ஏற்படுத்தவும் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சித்த நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த பேச்சாளர் என்ற தொழில் செய்து வரும் கண்ணன் மீது புகார் அளித்தல் சார்பில்…
கடந்த 5-8 – 2021 திருநெல்வேலி மாநகர் பகுதியில் நடந்த ஒரு அரசியல் கூட்ட மேடையில் நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த பேச்சாளர் என்ற தொழில் செய்து வரும் நெல்லை கண்ணன் என்பவர், வேண்டுமென்றே கொச்சையாகவும் ஆபாசமாகவும் அவதூறுகளையும் பல கட்டங்களாக பேசியுள்ளார்.
பாரத தேசத்தில் ஹிந்து சமுதாயத்தை கோவிலுக்குப் போகிற நாய்கள் என மிகவும் தரம் தாழ்ந்து கொச்சையாகப் பேசியுள்ளார் கண்ணன். இது ஹிந்துக்களின் மனதை வேதனை அடைய செய்கிறது. கோபம் ஏற்படுத்தி உள்ளது.
மிகப்பெரிய ஆன்மீகப் பணிகளைச் செய்து வருகிற ஹிந்துக்களின் ஆன்மிக நம்பிக்கையான இடமான காஞ்சிபுரம் ஸ்ரீகாமகோடி பீடம் பற்றி பொய்ச் செய்திகளை பரப்பியும் கொச்சையாகவும் வேண்டுமென்றே பேசியுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப் படுத்தும் விதமாகவும் பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களை வேண்டுமென்றே சினமூட்டும் விதத்தில் அவதூறாகப் பேசி உள்ளார்.
இவரின் இந்த மேடைப் பேச்சில் பெண்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் ஆபாசமாக பேசியுள்ளார்.
ஆன்மீக அமைதிப் பூங்காவான திருநெல்வேலியின் மாண்பைக் குலைக்கும் விதமாக “நம்ம ஊரில் ஜட்ஜ்மென்ட் எல்லாம் தெருவில் தான் நீதிமன்றம் அவசியம் இல்லை நீதிமன்றம் சென்றால் நேரமாகும் அதனால் இங்கேயே போட்டுவிடுவோம் என்றும், இந்தியாவில் நிறைய நபர்களைப் போட வேண்டும் என்று கொலை செய்யும் நோக்கத்தில் மிரட்டும் தொனியில் திருநெல்வேலியின் மாண்பைக் குலைக்கும் விதமாகவும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதித்தும் கொச்சைப்படுத்தியும் பொய்யான அவதூறுகளை வேண்டும் என்றே பேசியுள்ளார்.
நேர்மையாக செயல்பட்டு வரும் மாண்புமிகு நீதிபதி திரு .சுப்பிரமணியம் அவர்களை வேண்டுமென்றே அவருடைய நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி ‘அவன் இவன்’ என்றும், ‘மூடு’ என்றும் ஒரு நீதிபதி என்றும் பாராமல் கீழ்த்தரமான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி அவதூறுகளைப் பரப்பி அவமதித்துப் பேசியுள்ளார்.
அதுபோக ஹிந்துக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் விதமாக அதன் சமுதாயங்களை வேண்டுமென்றே ‘ஜாதி கலவரத்தை தூண்டும் விதமாக சினமூட்டும் விதமாக பேசி உள்ளார்,
பாரம்பரியமாக தேசப்பற்றுள்ள மக்களின் மிகுந்த ஆதரவு பெற்ற நாளிதழான தினமலர் அதன் நிர்வாக குடும்பத்தினர் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் வேண்டுமென்றே கீழ்தரமான வார்த்தைகளால் கொச்சைப் படுத்தி அவதூறாகப் பேசி உள்ளார்.
இப்படி கீழ்த்தரமான கருத்துகளை அவர் பேசிய அரசியல் மேடை, நாட்டுக்கு இயைந்து வராத தேச விரோத சித்தாந்தத்தைக் கொண்ட கூட்டத்தினர் இருந்த மேடை. அவர்கள் மத்தியில் இத்தகைய கருத்துகளை வேண்டுமென்றே, கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்! இவர் பேசிய பேச்சுகளுக்கு அங்கே இருந்த பிரிவினைவாதிகளும் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.
ஏற்கெனவே பாரத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்வேன் என்று அவர்கள் மீது அவதூறு பரப்பியதன் வழக்கு இவர் மீது உண்டு cr no 423/19 U/s 504,505(1)(b) 505(2) IPC.என்ற எண் கொண்ட வழக்கு நீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் உள்ளது! இந்த வழக்கில், தான் இது போன்று இனி பேசமாட்டேன் என்று பிணையில் வந்துள்ளார்!
இந்நிலையில், பெரும்பான்மை ஹிந்துக்களை ஆபாசமாகவும் கொச்சைப் படுத்தி பேசியும், ஹிந்து சமுதாயங்கள் இடையே வன்முறையை ஏற்படுத்தும் விதமாகவும், வேண்டுமென்றே ஜாதி கலவரங்களை ஏற்படுத்தும் விதமாகவும், பெண்களை கீழ்த்தரமாக ஆபாசமாக பேசியும், ஹிந்துக்களின் நம்பிக்கை இடமான ஸ்ரீகாஞ்சி மடத்தை பற்றி பொய்யாக அவதூறாகப் பேசியும், முக்கியமாக நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிப்பு செய்தும் மாண்புமிகு நீதிபதிகளை கீழ்த்தரமான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி பேசியும், ஆன்மீக அமைதி பூங்காவான திருநெல்வேலியை வன்முறை தூண்டும் விதமாகவும் சினமூட்டி சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்க வேண்டும் என்று செயல்பட்டுள்ளார் நெல்லை பேச்சாளர் தொழில் செய்து வரும் கண்ணன்!
எனவே காவல்துறை ஆணையாளர் அவர்கள் மேற்குறிப்பிட்ட நபர் மருத்துவமனை நாடகங்களை அரங்கேற்ற விடாமல் அவர் மீது உண்மையான உறுதியான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து ஏற்கெனவே வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், காவல்துறையின் சிறப்பையும், சீரிய செயல்பாட்டையும் உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்…
Sources :
1) https://fb.watch/7hknPvYwH3/
2) https://youtu.be/hukQCwoOfN8
புதன்கிழமை இன்று காலை நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்தப் புகார் மனுவை அளித்த போது, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார் , விஎச்பி மாவட்ட செயலாளர் இ. ஆறுமுகக்கனி , சக்சம் மாநில இணை செயலாளர் ராஜகோபால், மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் முத்துராஜ் , விஎச்பி மாவட்டப் பொறுப்பாளர் இசக்கி, விஎச்பி ஒன்றியப் பொறுப்பாளர் குருசாமி, ஆர்எஸ்எஸ்., நல்லகண்ணு , ஏபிஜிபி ரமேஷ், பாஜக., மாடசாமி ஆகியோர் உடன் இருந்தனர்!