
டாஸ்மாக்கின் பின்பக்க சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக மணிகண்டன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வேலை முடிந்ததும் வழக்கம் போல மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் காலையில் வந்து பார்க்கும்போது கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 450 மதுபாட்டில்கள் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இதன் மதிப்பு 65 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்றும் மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து அருகிலுள்ள விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.