
திருச்சி மாவட்டத்தில் ‘மிஸ்சி நோயால்’ இதுவரை 15 பேர் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிந்தைய காலத்தில், சாதாரணமாக குழந்தைகளின் உடலில் இருக்கும் எதிர்ப்பு திறன் அதற்கு மாறாக அபரீதத்துடன் அதிக அளவில் செயல்படுவதையே மிஸ்சி நோய் என , குழந்தைகள் மருத்துவத்தில் கண்டறியப்பட்டு உள்ளது.
( Multisystem inflammatory syndrome in children (MIS-C) கொரோனா பாதிப்பு காலத்தில் தமிழக அளவில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் இந்த மிஸ்சி ( Misc ) நோயால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் குறைந்த அளவிலேயே, குழந்தைகளை பாதித்த மிஸ்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெற்றோர்கள் கவன குறைவாக இருந்தால் பெரிய அளவில் மிஸ்சி நோய் பாதிப்பு ஏற்படுத்தும் என்கின்றர் மருத்துவர்கள்.
மேலும் கொரோனா பாதித்த பிந்தைய காலத்தில், குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, வாந்தி, அதிக அளவிளான இருதய துடிப்பு, கண் சிவந்து காணப்படுதல், உதடு மற்றும் நாக்கு தடிப்பாக இருத்தல் போன்ற அறிகுறிகள் இருப்பதையே இந்த மிஸ்சி நோய்க்கான ஆரம்ப கட்டம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகிறனர்.
இதுபோன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் இருக்கும் பட்சத்தில், உடனடியாக 18 வயதுக்கு உட்பட்டவர்களை குழந்தைகள் நல மருத்துவரிடம் நேரிடையாக அழைத்து வந்து உரிய ஆலோசனை பெற்று வந்தால், நோயின் பாதிப்பு தம்மையை குழந்தைகளின் புறம் காலில் உள்ள நரம்புகளின் நாடி துடிப்பு சீராக உள்ளதா அல்லது குறைய தொடங்கி வருகிறதா என்பதை, குழந்தைகளின் பலவீனத்தை அறிய முடியும்.
இது தவிர, அபரீதமாக உடலில் செயல்படும் எதிர்ப்பு தன்மைக்கு
ஏற்ப எதிர்ப்பு திறன் பரிசோதனை செய்து, திசு, நுரையீரல், இருதயத்துக்கு செல்லும் இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு ஆகியவற்றில் இருந்து குழந்தைகளை எளிதில் காப்பாற்ற முடியும் என்கின்றனர், குழந்தைகள் நல மருத்துவர்கள்.
குழந்தைகளை அச்சுறுத்திவரும் அறிய வகை மிஸ்சி நோய் ஆரம்ப கட்டத்தில் கண்டறியபட்டாலும், வரும் முன் காப்போம் என்பதற்கு ஏற்ப, குழந்தை செல்வங்களை காப்பதில் பெற்றோர்கள் முழுகவனம் செலுத்த வேண்டும் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
மேலும் மிஸ்சி நோய் அறிகுறிகளை ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது. தவறினால் உயிர் இழப்பு ஏற்படவாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.