இந்துக்களை அவமதிக்கும் வகையில் விளம்பரம்! பிரபல பிரியாணி கடைக்கு கண்டனம்!

Niyaas
Niyaas

மத உணர்வுகளை காயப்படுத்தியதாக பிரபல பிரியாணி உணவகத்துக்கு எதிராக இந்து மத அமைப்பினர் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த Niyaz என்ற உணவகத்தை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அந்த உணவகம் சமீபத்தில் வெளியிட்டிருந்த விளம்பரம் இந்து மத உணர்வுகளை காயப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டின் பேரில் அந்த சங்கிலித் தொடர் உணவகங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் மூடியுள்ளனர்.

பெங்களூருவில் Niyaz என்ற ஹோட்டல் நிறுவனம் பிரபலமாக விளங்கி வருகிறது. பெங்களூரு நகரம் முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கிறது இந்த உணவகம். இந்த ஹோட்டல் அதனுடைய பிரியாணிக்காக பிரபலமானதாக விளங்குகிறது.

சமீபத்தில் Niyaz ஹோட்டல் சார்பில் அதனுடைய சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் போஸ்டர் பகிரப்பட்டிருந்தது. அதில் சாமியார் ஒருவர் தனது சீடர்களை பார்த்தவாறு அமர்ந்து, இந்த ஓட்டலின் பிரியாணியை ருசித்த பின்னர் எனக்காக தியாகம் எதுவும் செய்ய வேண்டாம் இந்த பிரியாணி தந்தால் போதும் என சொல்வதாக அந்த போஸ்டர் அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் தளத்தில் இந்த விளம்பரம் படத்தை பகிர்ந்து எங்கள் பிரியாணி பிற பிரியாணிகளுக்கு அகம் பிரம்மாஸ்மி என சொல்கிறது என தெரிவித்துள்ளனர். அகம் பிரம்மாஸ்மி என்றால் நானே தெய்வீகமானவன் என அர்த்தம்.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஹாட் டாபிக் ஆக மாறியிருக்கிறது. இந்து மத உணர்வுகளை காயப்படுத்தி ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் தயாரித்திருப்பதைக் கண்டித்து பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் ஓட்டல் நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூர் பாஜகவினரும் இந்த விவகாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட காவல்துறையினர் அந்த ஓட்டல் கிளைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக மூட உத்தரவிட்டு, பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்தியுள்ளனர்.

இதனிடையே அந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை தனது பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கும் ஓட்டல் நிர்வாகம், இந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதால் மன்னிப்பு கோருவதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories