1500 ஸ்டெராய்டுகள் 8 முறை கருக்கலைப்பு.. ஆண்குழந்தைக்காக மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்!

karpam
karpam

மும்பையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 40 வயது பெண்ணுக்கு 8 முறை கருக்கலைப்பு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மும்பை தாதர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தன்னை கொடுமை படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் புகார் போலீசாரையே அதிர வைத்துள்ளது. கிட்டத்தட்ட 8 முறைக்கு மேல் அப்பெண்ணுக்கு கருக்கலைக்கு செய்யப்பட்டுள்ளது. ஆண்குழந்தை கருத்தரிப்புக்காக கிட்டத்தட்ட 1500 ஸ்டெராய்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு அப்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது.

படித்த ஒரு குடும்பத்தில் மருமகளாக சென்றுள்ளார் அப்பெண். கணவனும், மாமியாரும் வழக்கறிஞர்கள், கணவரோடு பிறந்த பெண் டாக்டர் என படிப்பில் பிரமாண்டமாக இருந்துள்ளது அக்குடும்பம்.

அப்பெண்ணுக்கு 2009ல் ஒரு பெண்ணும், 2011ல் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் தன்னுடைய குடும்பத்தை கட்டிக்காக்க வேண்டுமென்றால் ஆண் குழந்தையே வேண்டுமென அப்பெண்ணின் கணவர் கூறி சித்ரவதை செய்துள்ளார்.

மீண்டும் பாதிக்கப்பட்ட பெண் கருவுற, அவரை மருத்துவருக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். தனக்கு குழந்தை வேண்டாமென மனைவி ஆசைப்படுவதாக பொய் கூறி கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்பதற்காக மருத்துவ ரீதியாக சிகிச்சையை தொடங்கியுள்ளார். இதற்காக தன்னுடைய மனைவியை பேங்காக் அழைத்துச் சென்று சிறப்பு சிகிச்சையை கொடுத்துள்ளார்
வழக்கறிஞரான கணவர்.

இதற்காக சில அறுவை சிசிச்சையும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு ஊசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. ஒன்று, இரண்டு அல்ல மொத்தமாக 1500 ஸ்டெராய்டுகள் செலுத்தப்பட்டுள்ளன. விருப்பமே இல்லாமல் அப்பெண்ணுக்கு கட்டாயமாக 8 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணுக்கு சட்ட ரீதியாக கருக்கலைப்பு செய்தது தொடர்பாகவும், உடல் ரீதியாக துன்புறுத்தல் செய்தது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஆண் குழந்தை வேண்டியும், தேவையில்லை எனவும் பலரும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வது பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. சமீபத்தில் திருவண்ணாமலையில் தலைமை மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி மருத்துவர் ரேணுகா என்பவரை கைது செய்தனர் .

போலி மருத்துவர் ரேணுகா இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையிரனால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் வெளியே வந்ததும் தொடர்ந்து கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories