லாரியில் 15 டன் ரேஷன் அரிசி கடத்தல்!

lorry
lorry

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் அடிப்படையில் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் குடிமைப்பொருள் அதிகாரிகள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பொன்னேரி கரை பகுதியில் காஞ்சிபுரம் தாலுகா போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தியபோது லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து லாரியை குடிமைப்பொருள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது லாரியில் 15 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து லாரியுடன் அரிசியை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories