Toyota Hiace எம்பிவி ரக வாகனத்தை இந்திய பயன்பாட்டாளர் ஒருவர் சிறிய வீடாக மாற்றியமைத்துள்ளார். இதற்காக என்னென்ன சிறப்பு வசதிகளை எல்லாம் அவ்வாகனத்தில் அவர் சேர்த்திருக்கின்றார்.
Toyota நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற எம்பிவி ரக கார்களில் Hiace மாடலும் ஒன்று. இந்த வாகனத்தை இந்தியாவில் மிக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நிறுவனம் விற்பனைச் செய்தது. எனவேதான் அரிதினும் அரிதாக இவ்வாகனம் இந்திய சாலைகளில் தனது தரிசனத்தை வழங்கி வருகின்றன.
இப்படியான ஓர் வாகனத்தை இந்திய பயன்பாட்டாளர் ஒருவர் மேலும் ஓர் சிறப்பு மிக்க வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார். ஆம், நீண்ட பயணங்களுக்கான சிறிய வீடாக அதனை மாற்றியிருக்கின்றார்.
Toyota Hiace ஓர் எம்பிவி ரக வாகனம் என்பதால் இதன் உட்பகுதி அதிக இட வசதியைக் கொண்டதாக இருக்கின்றது. இத்தகைய அதிக இட வசதி இது கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே பல Hiace பயன்பாட்டாளர்கள் அவ்வாகனத்தை தங்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ப மாற்றியமைத்து வருகின்றனர்.
அந்தவகையிலேயே கேரளாவைச் சேர்ந்த ஓர் Toyota Hiace பயன்பாட்டாளர், அந்த எம்பிவி வாகனத்தை சின்ன வீடாக மாற்றியமைத்துள்ளார். ஆம், Toyota Hiace மாடிஃபிகேஷன் வாயிலாக தற்போது மோட்டார் இல்லமாக மாறியிருக்கின்றது. அதாவது, வீட்டில் இருக்கும் அனைத்து முக்கிய வசதிகளையும் Toyota Hiace எம்பிவி தற்போது பெற்றுள்ளது.
எனவேதான் இந்த Toyota Hiace எம்பிவியை அனைவரும் சிறிய வீடு என அழைக்க தொடங்கியிருக்கின்றனர். இவ்வாறு அழைப்பதற்கு ஏற்ப சமையலறை, கழிவறை, சொகுசான இருக்கை வசதி என பல்வேறு சிறப்பு வசதிகள் வாகனத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
ஒட்டமொத்தமாக 7 பேர் வரை அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் Toyota Hiace இன் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் முதல் இரு இருக்கைகளை மட்டும் எலெக்ட்ரானிக் பொத்தான்கள் மூலம் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது இரண்டுமே கேப்டன் ரக இருக்கைகள் ஆகும்.
இத்துடன் ஆம்பிசியன்ட் மின் விளக்கு, பிரீமியம் தர ஸ்பீக்கர்கள், எல்இடி தொலைக் காட்சிப் பெட்டி, சிறிய குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் Toyota Hiace எம்வியில் வழங்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, சமையலறையில் சமைப்பதற்கு ஏதுவான பொருட்களை வைத்துக் கொள்ள இட வசதி மற்றும் எரிவாயுவை வைத்துக் கொள்ள ஏதுவான இடம் உள்ளிட்டவையும் Hiace இல் வழங்கப்பட்டிருக்கின்றன.
மேலும், டிரைவர் பகுதியில் இருந்து கேபின் தனியாக இருக்கின்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, டிரைவர் அறை மற்றும் பயணிகள் அறை இரு அறை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, டிரைவர் அறை பகுதியில் மூன்று பேர் வரை அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆகையால், தேவைப்பட்டால் முன் பக்கத்தில் டிரைவருடன் சேர்த்து இன்னும் இருவரும் பயணிக்கலாம். Toyota Hiace எம்பிவியின் உட்பகுதியை பிரீமியம் தர தோற்றத்திற்கு மாற்றுவதற்காக மர பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம் மிக உயரிய விலைக் கொண்ட வாகனத்தைப் போல் Hiace எம்பிவியை காட்சியளிக்க செய்கிறது.
இதுமட்டுமின்றி, Toyota Hiace எம்பிவியின் உட்பகுதியை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்காக வெளிப்புறத் தோற்றத்திலும் லேசான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மோதலில் இருந்த தப்பிக்க உதவும் குவார்டுகள், புதிய எல்இடி முகப்பு மின் விளக்கு, சந்தைக்கு பிறகான எல்இடி வால் பகுதி மின் விளக்கு, முன் மற்றும் பின் பக்க பம்பர் உள்ளிட்டவை புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன.
இந்த ஒட்டுமொத்த மாற்றத்தினால் Toyota Hiace ஓர் குடும்பம் பயணிப்பதற்கு ஏதுவான ஓர் வாகனமாக மாறியிருக்கின்றது. மிக தெளிவாக கூற வேண்டுமானால் மேலே கூறியது போல் Toyota Hiace மோட்டார் இல்லமாக மாறியிருக்கின்றது. இந்த மாற்றத்தை OJES automobiles எனும் நிறுவனம் செய்திருக்கின்றது.
மாற்றத்தைப் பெற்றிருக்கும் Toyota Hiace 2016 மாடலாகும். இந்த வாகனத்தை மீண்டும் நவீன கால டிசைன் தாத்பரியங்களுடன் இந்திாயவில் களமிறக்க Toyota முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது நிறுவனத்தின் மிக சிறந்த எம்பிவி ரக வாகனமாக Toyota Innova Crysta மட்டுமே சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.