திருப்பதி: இயற்கை வேளாண் பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவு விற்பனை சோதனை ஓட்டம்!

thirupathi 2
thirupathi 2

திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் இயற்கை வேளாண் பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவு விற்பனை சோதனை ஓட்டம் தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மே மாதம் முதல் இயற்கை வேளாண்மையால் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி, வெல்லம், பருப்பு, முந்திரி, திராட்சை நெய் உள்ளிட்டவை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டு அதில் தயார் செய்யும் பிரசாதங்கள் மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

இதேபோல் பக்தர்களுக்கும் ‘சம்பிரதாய போஜனம்’ என்ற பெயரில் இயற்கை வேளாண்மை உற்பத்திப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.

அதன்படி நேற்று திருமலை அன்னமய்யா பவனில் ‘சம்பிரதாய போஜனம்’ என்ற பெயரில் காலை சிற்றுண்டி, மதியம் உணவு, இரவு உணவு ஆகியவை தயார் செய்து சோதனை ஓட்ட முறையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் வரும் 5 நாட்களுக்கு மட்டும் 500 பேருக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த நாடு முழுவதும் உள்ள பல நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து லாப நோக்கு இல்லாமல் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

எனவே அவர்கள் மூலமாக இந்த வாரம் முழுவதும் பக்தர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் இந்த உணவுப் பொருட்கள் தயார் செய்வதற்கு எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து திட்டமிட்டு பின்னர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இயற்கை வேளாண்மை உற்பத்தி மூலம் வரக்கூடிய உணவு தானியங்களை கொண்டு தயார் செய்யும் உணவுகளை உட்கொள்வதால் ஆரோக்கியமாக இருப்பதோடு நம் பாரம்பரிய உணவு கலாசாரத்தை மீண்டும் கொண்டு வர முடியும். இதை செயல்படுத்தும் தேவஸ்தானத்திற்கு இயற்கை வேளாண் உற்பத்தி விவசாய சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories