சிறுவனை சிறுமி என்று பதிவிட்ட ஆனந்த் மஹிந்தரா! வைரலான பதிவுகள்!

neelakandan
neelakandan

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எப்போதும் இளம் திறமைகளை ஊக்குவிப்பதில் முன்னுரிமை கொடுப்பவர். அவரின் வலைதள பக்கங்களை பின்தொடர்பவர்களுக்கு இது தெரியும்.

இதற்கிடையே, இன்று ஆனந்த் மஹிந்திரா ஒரு சிறுவன் களரிபயட்டு பயிற்சி செய்யும் வீடியோவால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அந்த வீடியோவை பகிர்ந்துகொண்டார். கூடவே,

‘எச்சரிக்கை: இந்த இளம் பெண்ணின் வழியில் செல்லாதீர்கள்! நம் விளையாட்டு முன்னுரிமைகளில் களரிபயட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவு வெளிச்சம் கொடுக்கப்பட வேண்டும். இது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்…” என்று பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இவரின் பதிவுக்கு அந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் பதில் கொடுத்தான். விரைவாகவே அந்த சிறுவனின் பதிவு ஆனந்த் மஹிந்த்ராவின் பதிவை விட வைரலாகச் சென்றது. காரணம் ஆனந்த் மஹிந்திரா தவறாக பதிவிட்டிருந்தது தான். அதாவது,

வீடியோவில் களரி விளையாடியது கேரளாவில் உள்ள ஏகவீர களரிபயட்டு அகாடமியின் மாணவரான நீலகண்டன் நாயர் என்ற சிறுவன். ஆனால், ஆனந்த் மஹிந்திரா சிறுவனின் நீள முடி உள்ளிட்டவற்றை வைத்து அவரை சிறுமி என்று அடையாளப்படுத்தி பதிவிட்டு இருந்தார்.
பின்னர் ஆனந்த் மஹிந்திராவின் பதிவுக்கு நீலகண்டன் பதிலளித்தார்.

‘உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சார். ஒரு சிறிய திருத்தம் – நான் ஒரு பெண் அல்ல, நான் 10 வயது சிறுவன். களரி குறித்த ஒரு குறும்படத்தில் நடிப்பதற்காக என் தலைமுடியை நீளமாக வளர்த்து வருகிறேன்,” என்று பதில் கொடுத்திருந்தார்.
இந்த இரண்டு பதிவும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிலர் சிறுவனை பாராட்டி வரும் நிலையில், சிலர் ஆனந்த் மஹிந்திராவின் பதிவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் களரி குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். பண்டைய தற்காப்புக் கலை வடிவமான களரிபயட்டு கேரளாவில் உருவானது. களரி என்றும் அழைக்கப்படும் களரிபயட்டு, இந்தியாவிற்கு தனித்துவமான ஆயுதங்களான குண்டுகள், குச்சிகள் மற்றும் வாள்களுடன் பண்டைய போர்க்களத்திற்காக வடிவமைக்கப்பட்டது.

வீடியோவில், நீலகண்டன் நாயர் ஒரு நீண்ட குச்சியைப் பயன்படுத்தி சிரமமின்றி களரிபயட்டு பயிற்சி செய்கிறார். இவரின் பயிற்சி தொடர்பான நிறைய வீடியோக்கள் வலைதளங்களில் காண முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories