பெட்ரோல் பம்பில் பற்றிக் கொண்ட காதல்! சிறுவனை மணந்த பெண் கைது!

lovers
lovers

19 வயதான இளம்பெண் ஒருவர், பொள்ளாச்சி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் வேலை செய்து வந்த பங்கிற்கு, 17 வயதான சிறுவன் ஒருவன் அடிக்கடி பெட்ரோல் நிரப்ப வந்துள்ளான். அப்போது இவருடன் லாவண்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் போட வரும் போது எல்லாம், தன்னை சிரிக்க வைத்த சிறுவன் மீது இளம்பெண்ணிற்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் குறித்து சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர், இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் காதல் ஜோடிகளை அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.

அப்போது சிறுவனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண், சிறுவனிடம் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு சிறுவனை அழைத்துச் சென்று கட்டாய கல்யாணம் செய்திருக்கிறார்.

இதனிடையே திருமணம் முடிந்த பின்னர் வீட்டிற்கு வந்த சிறுவனிடம் பெற்றோர் விசாரித்த போது, அந்த பெண்ணும் தானும் திருமணம் செய்துகொண்டதாக கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி பெண் (19) திருமணம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து பெண்ணின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வளர் இளம் பருவ காதலால் 19 வயது பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

17 வயது சிறுவனை திருமணம் செய்த காரணத்திற்காக போக்சோவில் இளம் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories