லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் கைது!

fake money
fake money

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக ஆர்.கலைச்செல்வி (45) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளர்கள் அருண், மற்றும் அந்தோணி யாகப்பா ஆகியோர் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்.

அதில், தங்களது நிறுவனத்தில் இருந்து புதிதாக விற்பனை செய்து, பதிவு செய்த லோடு ஆட்டோவுக்கு 2,500 ரூபாயும் ஏற்கனவே பதிவு செய்து ஆர்.சி.புக் வாங்க இரு வாகனங்களுக்கு 4,500 ரூபாயும் லஞ்சமாக தர வேண்டும் என புரோக்கர் கார்த்திகேயன் மூலம் கலைச்செல்வி கேட்டதாகவும், லஞ்சம் தர விரும்பாததால் புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த புகாரினை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் பட்டுக்கோட்டைக்கு சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறைந்திருந்தனர்.

அப்போது 4,500 ரொக்கப்பணத்தில் ரசாயன பவுடர் தடவி அருண் மற்றும் அந்தோணி யாகப்பா இருவரும் புரோக்கர் கார்த்திகேயனிடம் வழங்கினர்.

அந்த பணத்தை கார்த்திகேயன் கலைச்செல்வியிடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும், அலுவலகத்திலேயே வைத்து, யார் யாரிடம் பணத்தை பெற்றுள்ளார்கள். அந்த பணத்தை என்ன செய்தார்கள் என தீவிரமாக விசாரித்து வருகின்றார்கள்.

மேலும் அவரிடமிருந்து லஞ்சப் பணம் 4,500 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில் பட்டுக்கோட்டையிலுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் நேரிடையாக பணத்தை வாங்கமாட்டார்.

அதற்கென்றுள்ள புரோக்கர் மூலம் வாங்கி, மாலையில் செல்லும் போது பெற்றுக்கொள்வார். இந்த அலுவலகத்தில் பதிவு செய்யும் அனைத்து பணிகளுக்கும் லஞ்சமாக பணம் கொடுத்தால், தான் பணிகள் விரைவில் நடைபெறும்.

பைக் முதல் கனரக வாகனம் முதல் 300 முதல் 5 ஆயிரத்திற்கு மேல் தினந்தோறும் லஞ்சமாக பணம் வசூலிக்கப்படுகிறது. வாகன விற்பனையாளர்கள், வாகனத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட பணத்தை கொடுத்து விடுவார்கள்.

அது மட்டும் இல்லாமல், வாகனத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், அதற்கேற்றார் போல் பணம் வசூலிப்பார்கள்.

பட்டுக்கோட்டையில் எந்த பணிகளாக இருந்தாலும், பணம் இல்லை என்றால், நடைபெறாது என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கின்றது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

தற்போது புகார் கொடுத்தவர்களிடம் கறாராக பணத்தை கேட்டதால், வேறு வழியின்றி லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகாரளித்துள்ளனர்.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள போக்குவரத்து அலுவலத்திலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை செய்யவேண்டும், புரோக்கர்கள் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories