அரசு மருத்துவமனை லிஃப்ட்டில் கிடந்த எலும்பு கூடு! அலறி ஓடிய ஊழியர்!

lift - 2026

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ளது கைலி.
இங்கு அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையின் ஒரு லிஃப்ட் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் செயல்படவில்லை.

இதனால் யாரும் அந்த லிஃப்டை யாரும் பயன்படுத்தவில்லை. மருத்துவமனை நிர்வாகமும் அதனைக் கண்டுகொள்ளாததால் அது பூட்டியே கிடந்தது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மாடி படி ஏறுவதற்கு மிகவும் சிரமப்படாததால், அந்த லிஃப்ட்யை சரி செய்து நோயாளிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம் என முடிவு செய்தார்கள்.

அதன்படி 24 வருடங்களுக்குப் பிறகு கடந்த 1 ஆம் தேதி, ரிப்பேர் வேலைக்காக அந்த லிஃப்டை ஊழியர் ஒருவர் திறந்து பார்த்துள்ளார்.

அப்போது அங்குப் பார்த்த காட்சியைப் பார்த்த அந்த ஊழியர் தான் கொண்டு வந்த பொருட்களை அங்கேயே போட்டு விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள், 24 வருடங்களாகப் பூட்டியே கிடந்த லிஃப்ட்க்குள் மனித எலும்புக் கூடு கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்கள்.

இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள், அந்த எலும்புக் கூடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அது ஆண் எலும்புக்கூடு என்பது தெரியவந்துள்ளது.

அவர் யார்? உள்ளே மூச்சுத்திணறி இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து அவரை இங்குக் கொண்டு போட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதோடு கடந்த 24 வருடங்களில் அந்தப் பகுதியில் யாரும் காணாமல் போயிருக்கிறார்களா என்பது பற்றிய விவரங்களையும் அவர்கள் சரிபார்த்து வருகின்றனர்.

இதற்கிடையே எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் மருத்துவமனையில் 24 வருடங்களாக மனித எலும்புக் கூடு கிடந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories