கொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை! WHO பரிந்துரை!

who - 2026

கடுமையான கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கையான நோய் எதிர்ப்பு புரதங்களைக் கொண்டு (ஆன்டிபாடி) சிகிச்சை அளிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் இருந்து பல்வேறு நாடுகள் மீண்டு வந்துள்ளன. எனினும் மீண்டும் பரவலாம் என்பதால் அடுத்தடுத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய அபாயம் அதிகமிருப்பவா்களுக்கும் தீவிரமான கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கும் செயற்கையான ஆன்டிபாடிக்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு மேம்பாட்டுக் குழு (ஜிடிஜி) பரிந்துரைத்துள்ளது.

‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய இரு வகை செயற்கை நோயெதிா்ப்பு புரதங்களைக் கொண்டு இந்த சிகிச்சை அளிக்கலாம் என்று ஜிடிஜி குழு தெரிவித்துள்ளது.

முதலாவதாக, கொரோனா பாதிப்பு அதிகமில்லாவிட்டாலும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அபாயம் அதிகமுள்ள வயதானவா்கள், ஏற்கெனவே நீண்டகால நோயால் அவதிப்படுவோர் போன்றவா்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கலாம் என்று ஜிடிஜி கூறியுள்ளது.

மேலும், இயற்கையிலேயே நோயெதிா்ப்புப் புரதத்தை உற்பத்தி செய்ய முடியாத உடல்குறைபாடு கொண்ட, கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படக் கூடிய நோயாளிகளுக்கும் ‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ செயற்கை நோயெதிா்ப்புப் புரதங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது. முன்று ஆய்வுகளில் காணப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வுகளில், ‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய செயற்கை நோயெதிா்ப்புப் புரதங்களைச் செலுத்தினால், நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய அபாயம் குறையலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு ஆய்வு முடிவுகளின் மூலம், இந்த இரு செயற்கைப் புரதங்களும் நோயெதிா்ப்புக் குறைபாடு கொண்டவா்கள் கொரோனாவால் உயிரிழப்பதற்கான அபாயத்தைக் குறைக்கலாம் என்று தெரியவந்துள்ளது என்று பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories