கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கெட்டாக்கும் திட்டம்: தடை கோரி வழக்கு..?!

hraja interview
hraja interview

தமிழக அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும் என்று பாஜக. மூத்த தலைவர் ஹ. ராஜா தெரிவித்தார்.

அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது… அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டப்பட்டால், மத வழிபாடு குறித்த பாடம் வைக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்து. அதை தமிழக அரசு செயல்படுத்துமா?!

கோயில் நகைகளை உருக்கக்கூடாது என்று, விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அறநிலையத்துறை சிறப்பாக செயல்படவும், தமிழகத்தில் காணாமல் போன 8000 கோயில்களை மீட்டெடுப்பதற்கு அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்க தயார்… என்று கூறினார்.

narayanan-thirupathi
narayanan-thirupathi

கோயில் நகைகள் உருக்குதல் தொடர்பில்… பாஜக., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட கருத்து:

கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி வங்கியில் சேமிக்கக்கூடாதா?

தாராளமாக சேமிக்கலாம். ஆனால், அதை செய்ய வேண்டியது கோவில்கள் தானே தவிர, அரசுக்கு உரிமை இல்லை.

திருப்பதி கோவில், சோம்நாத் கோவில் போன்ற பல்வேறு கோவில்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்களே?

ஆமாம். உண்மை தான். ஆனால் அந்த நகைகள் அந்தந்த கோவில்களின் சொத்தாக தான் இருக்கும். அந்த நகைகளை வங்கியில் சேமிப்பதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய் அந்தந்த கோவில்களின் மேம்பாட்டிற்கு தான் உபயோகிக்கப்படும்.

தமிழக அரசு சொல்வது என்ன?

தமிழகத்தில் உள்ள பல கோவில்களிலிருக்கும் தங்க நகைகளை உருக்கி மொத்தமாக அவற்றை வங்கியில் சேமித்து அதில் கிடைக்கும் வட்டி வருவாயை அனைத்து கோவில்களுக்கும் செலவு செய்வோம் என சொல்கிறது.

இதை ஏன் செய்யக்கூடாது?

கோவில் சொத்துக்களுக்கு அந்தந்த கோவில்களில் குடியிருக்கும் தெய்வங்களே சொந்தக்காரர் என்று சட்டம் சொல்கிறது. இதை உச்சநீதி மன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது. (Deity is the owner of the Temple). தி மு க அரசு கூறுகிற திட்டத்தின் அடிப்படியில் கோவில் சொத்துக்கள் பொது சொத்துக்களாக கருதப்பட்டு ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்று அரசுக்கு சொந்தமாகி விடும். அதாவது கோவில் சொத்துக்களை அரசு மறைமுகமாக கையகப்படுத்தும் முயற்சியே இது.

மக்களுக்கு இது எப்படி பாதகமாகும்?

மக்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றவே குறிப்பிட்ட கோவிலுக்கு/தெய்வத்திற்கு காணிக்கை செலுத்துகின்றனர். அப்படி செலுத்தப்பட்ட காணிக்கைகளை அந்த கோவிலின் மேம்பாட்டுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்பதே நியதி. பொது செலவு என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டால் மக்கள் கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவதை நிறுத்தி விடும் வாய்ப்பு உள்ளது.

இது சட்ட விரோதமா?

ஆம்! ஹிந்து அறநிலைய துறை என்பது கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் ஒரு அமைப்பே. அதற்கு மேல் கோவில் நிர்வாகத்தில் அதற்கு அதிகாரமில்லை. அறங்காவலர்கள் தான் நிர்வாகத்தை நடத்த வேண்டும். அப்படி நிர்வாகத்தில் முறைகேடுகள் அல்லது இடர்பாடுகள் எழும் போது அதை சரிசெய்து சீரமைக்கும் பணி மட்டுமே ஹிந்து அறநிலையத்துறையின் பணி. கோவில் சொத்துக்களுக்கு முழு உரிமையும் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்திற்கு மட்டுமே. ஒரு சிறு துரும்பின் மீது கூட அரசுக்கு உரிமையில்லை. பல கோவில்களிலிருந்து தங்கத்தை எடுத்து உருக்கி, வங்கியில் சேமித்து அதை பல கோவில்களுக்கு செலவு செய்ய அரசுக்கு உரிமையோ, அதிகாரமோ உறுதியாக இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories