பிரான்ஸை சேர்ந்த தம்பதியருக்கு வீட்டை புதுப்பிக்கும் போது புதையல் ஒன்று கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வரும் தம்பதியினர் தங்கள் வீட்டை புதுப்பிக்கும் போது செங்கல்களுக்கு நடுவே உலோக பெட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.
மேலும் அந்தப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர்.
இதையடுத்து சில தினங்களுக்கு பிறகு அந்த வீட்டில் ஒரு இடத்தில் சில தங்க நாணயங்கள் பை ஒன்றிலிருந்தும் கிடைத்துள்ளது. அதோடு சேர்த்து மொத்தமாக 239 தங்க நாணயங்கள் அந்த வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு ஏலம் விடப்பட்ட அந்த தங்க நாணயங்கள் 250,000 யூரோக்கள் முதல் 300,000 யூரோக்கள் வரை ஏலம் போகும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அந்த நாணயங்களை ஏலத்திற்கு கேட்டவர்கள் அதன் விலையை தாறுமாறாக உயர்த்த அவை ஒரு மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக விலை போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பணியாட்களும், வீட்டின் உரிமையாளர்களும் அந்த தொகையை பங்கிட்டு கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் புதையல் அனைத்தும் பிரான்ஸ் சட்டப்படி அரசுக்கு சொந்தமாக கருதப்படுகிறது.
இருப்பினும் புதையல் கண்டெடுக்கப்பட்ட அந்த நிலமானது 2016-க்கு முன்பு வாங்கப்பட்டதால் இந்த சட்டம் பொருந்தாது என்று கூறப்படுகிறது.
எனவே இந்த வீட்டை உரிமையாளர்கள் 2012-ல் வாங்கி விட்டதால் அதில் கிடைத்த புதையலும் அவர்களுக்கே சொந்தமானது. மேலும் வீட்டை புதுப்பிக்க முற்பட்ட அந்த தம்பதிக்கு புது வீடே வாங்கும் அளவிற்கு அதிர்ஷ்டம் அடித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.