அக்டோபர் 1 to 31 வரை பிங்க் அக்டோபர்: மலைக்கோட்டையில் பிங்க் வண்ண விளக்குகள்!

Trichy malaikottai
Trichy malaikottai

உலகம் முழுவதும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 1 முதல் 31-ஆம் தேதி வரை பிங்க் அக்டோபர் அனுசரிக்கப்பட்டுகிறது.

பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய். 2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு புதிதாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.

அதில் 6,85,000 பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். காலநிலை, பொருளாதாரப் பின்னணி என எந்த வேறுபாடுகளுமின்றி பல பெண்களும் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். பெண்களைத் தவிர, 0.5 முதல் 1% ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி 13.9 லட்சமாக இருந்த மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, 2025-ம் ஆண்டு 15.7 லட்சமாக அதிரிக்கும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

குறிப்பாக தில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட மெட்ரோபாலிடன் நகரங்களில் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சியின் மிக முக்கிய அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை பிங்க் நிறமாக மாறும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் பிங்க் அக்டோபர் மாதம் என கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வாறு கடைபிடிக்கப்படும் இந்த வாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய இடங்களில் மின் விளக்கை எரியச் செய்வது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் தனபாக்கியம் கணேசன் நினைவு அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் பிங்க் வண்ண மின் விளக்குகள் ஒளிரச் செய்யும் “பிங்க் அக்டோபர்”என்ற நிகழ்ச்சி மலைக்கோட்டையில் நடைபெற்றது.

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் அக்டோபர் 1 முதல் 31-ஆம் தேதி வரை பிங்க் விளக்குகள் எரியூட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு விளக்கை ஒளிரச் செய்யும் சாதனத்தை இயக்கி வைத்தார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜ்,திமுக பகுதி கழக செயலாளர் மதிவாணன், வட்ட கழக செயலாளர் சரவண செல்வன், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் உதவி ஆணையர் விஜயராணி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories