ஆவடி, தாம்பரம் மாநகர காவல் ஆணையர்களுக்கான காவல்நிலையங்களின் எல்லைகள் குறித்த அறிவிப்பை தமிழக போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டார்.
சென்னை மாநகரம் விரிவடைந்து வருகிறது. ஒரு காவல் ஆணையர் மட்டும் இதை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதனால், போலீஸ் நிர்வாக வசதிக்காக, கிரேட்டர் சென்னை, தாம்பரம், ஆவடி என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனராக ஏ.டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் போலீஸ் கமிஷனராக ஏ.டி.ஜி.பி., ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான போலீஸ் ஸ்டேஷன் எல்லைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்…
தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு 20 போலீஸ் ஸ்டேஷன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை… தாம்பரம், குரோம்பேட்டை, செய்யூர், சிட்லப்பாக்கம், பீர்க்கங்கரணை, குன்றத்தூர், பல்லாவரம், சங்கர்நகர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகிநகர், கானாத்துார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 2 நிலையங்கள்… சோமங்கலம், மணிமங்கலம் ஆகியவை தாம்பரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர், கேளம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்கள் தாம்பரம் காவல் ஆணையரின் கீழ் செயல்படும்.
ஆவடி…
ஆவடி காவல் ஆணையருக்கு 25 காவல் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை … மில்க் காலனி, ரெட்ஹில்ஸ், மணலி, சேதங்காடு, மணலி நியூ டவுன், எண்ணூர், மாங்காடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, முத்து புதுப்பேட்டை, பட்டாபிராம், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர், திருவேற்காடு, எஸ்.ஆர்.எம்.சி., ஆவடி, டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல், திருநின்றவூர்.
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து வேலவேடு, செவ்வாபேட்டை, சோழவரம், மீஞ்சூர், காட்டூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் இணைக்கப்பட்டுள்ளன.