நிலக்கரி தட்டுப்பாடு, இன்று நாடு முழுவதும் மின்வெட்டுக்குச் செல்ல இருக்கிறது என்ற செய்தி ஊடகங்களில் காண்கிறோம்!
தற்போது, மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் இதற்கான காரணங்களை விளக்கி இருக்கிறது! எந்த ஒரு மின் நிலையங்களும் கரி இல்லாமல் நின்று போகாது என்று விளக்கி இருக்கிறார்கள்!
மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன், 4 நாட்களுக்குத் தேவையானது, மற்றும் நிலக்கரி இந்தியா லிமிடெட் (சிஐஎல்) கையிருப்பில் உள்ளது! வெட்டி எடுக்கப்பட்டு மின் நிலையங்களுக்கு அனுப்பும் நிலையில் இருப்பது 400 லட்சம் டன்களுக்கு மேல்! இது மின் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது!
நாடு முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருவதால் கரியைக் கொண்டு செல்வது குறைந்த விட்டது. எனவே கையிருப்பு மின் நிலையங்களில் 15 நாட்களில் இருந்து நான்கு நாட்கள் வரை குறைந்து விட்டது என விளக்கி இருக்கிறார்கள்!
நிலக்கரி, மழை நேரத்தில் எடுத்துச் செல்ல எடை கூடும்! இது ஒரு பெரிய பிரச்னை. உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 24% அதிகரித்துள்ளது.
மின் நிலையங்களில் தினசரி சராசரி நிலக்கரி தேவை ஒரு நாளைக்கு 18.5 லட்சம் டன் , அதே நேரத்தில் தினசரி நிலக்கரி சப்ளை 17.5 லட்சம் டன் ஆகும். நீட்டிக்கப்பட்ட பருவமழை காரணமாக எடுத்து செல்வதில் தடை ஏற்பட்டது.
நிலக்கரியின் அதிக சர்வதேச விலைகள் காரணமாக, இறக்குமதி அடிப்படையிலான மின் நிலையங்கள் மூலம் PPA களின் கீழ் மின்சாரம் வழங்குவது கிட்டத்தட்ட 30 % குறைந்துள்ளது,
உள்நாட்டு மின்சாரம் இந்த ஆண்டு H1 இல் கிட்டத்தட்ட 24 % அதிகரித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான மின் நிலையங்கள் 45.7 BU திட்டத்திற்கு எதிராக சுமார் 25.6 BU ஐ உருவாக்கியுள்ளன. நமது நாட்டின் வேறு சில தொழில்சாலைகள் – கொரோனா முடிந்து உற்பத்தி அதிகரித்து வருகிற அலுமினியம், சிமெண்ட், ஸ்டீல் போன்ற மின்சாரம் உற்பத்தி அல்லாத தொழிற்சாலைகளின் தேவையை பூர்த்தி செய்ய அரசின் நிலகரி அமைச்சகம் தினசரி 2.5 லட்சம் டன்களுக்கு மேல் அளித்து வருகிறது!
தினசரி தேவையும் அரசு அளித்து வரும் நிலக்கரிக்கும் இருக்கும் இடைவெளி – மழை குறைந்து வருவதால் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்து இருக்கிறார்கள் !
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762660
- விஜயராகவன் கிருஷ்ணன்