எச்சில் துப்ப பை! சுத்தம் கருதி ரயில்வே நிர்வாகம் புதிய திட்டம் அறிமுகம்!

railway station
railway station

புகையிலை மற்றும் வெற்றிலை எச்சில் கறையை அகற்ற ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரயில் நிலையங்களில் குறிப்பாக வட மாநில ரயில் நிலையங்களில் புகையிலை மற்றும் வெற்றிலை எச்சில் கறையை பல இடங்களில் காண முடியும். கடினமாக பற்றிக்கொள்ளும் இந்தக் கறையை அகற்ற மட்டும் ரயில்வே துறை ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாயை செலவளிக்கிறது. இது தவிர பல கோடி லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி ஒன்றை ரயில்வே மேற்கொண்டுள்ளது.

ரயில்நிலையங்களில் எச்சில் துப்புவது, தூய்மையான சுகாதாரத்திற்கு வழி வகுக்காது. அதுவும் இந்த பெருந்தொற்று காலத்தில் எச்சில் துப்புவது மிகவும் கேடு விளைவிக்கும் செயல் ஆகும்.

train 1
train 1

கையடக்க பை மற்றும் பெட்டியை ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. வடக்கு ரெயில்வே, மத்திய ரெயில்வே மற்றும் மேற்கு ரெயில்வே மண்டலங்களில் 42 ரெயில் நிலையங்களில் இந்த பைகள் வழங்கும் கடைகளும், விற்பனை எந்திரங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. இதற்கான ஒப்பந்தம், ‘ஈசிஸ்பிட்’ என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. 3 வடிவங்களில் பை கிடைக்கும். ரெயில்வே வளாகத்தில் இருக்கும்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இந்த பையில் துப்பிக் கொள்ளலாம். இது மறுபயன்பாடு கொண்டது. 20 தடவை வரை துப்பலாம்.

அந்த பைக்குள் ஒரு தானிய விதை இருக்கும். பையை பயன்படுத்திய பிறகு மண்ணில் தூக்கி வீசினால், அது முளைத்து செடியாக வளரும். ரெயில் நிலையங்களில் எச்சில் துப்புவதை தடுக்க இந்த முறை உதவும் என்று ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

இத் திட்டம் ரயில்நிலையங்களின் தூய்மையை உறுதிப்பதும் என்று நம்பலாம்

இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அணைத்து ரயில்நிலையங்களிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories