பேஸ்புக், இன்ஸ்டாகிராம்.. ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்!

facebook - 2026

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தங்களுடைய இளம் பயனாளர்களை இழந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

சமூக வலைதளங்களில் தவிர்க்க முடியாத செயலிகளாக விளங்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை உபயோகப்படுத்தும் இளம் பயனர்களின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் 45 சதவீதத்தினர் அந்த செயலிகளிலிருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் வெர்ஜ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் அதே ஆண்டிற்குள் 20-30 வயதில் இருக்கும் பயனர்களில் 4 சதவீத பேர் செயலிகளிருந்து வெளியேறுவார்கள் என ஃபேஸ்புக் ஆவணங்களைக் காட்டி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது அமெரிக்கா , ஜப்பான் , இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் சிறப்பாக செயல்பட்டாலும் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து அதில் பதிவிடுபவர்களின் எண்ணிக்கையில் 13 சதவீதம் குறைந்திருப்பது கவலைக்குறிய விஷயம் என ஃபேஸ்புக் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

instagram
instagram

இளம் பயனர்கள் இந்த செயலிகளிலிருந்து வெளியேற இரண்டு காரணங்கள் முதன்மையாக முன்வைக்கப்படுகிறது. முதலாவது, 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வளர்ந்த பின் இன்ஸ்டாவை விட்டு ஃபேஸ்புக் நோக்கி நகர்கிறார்கள்.

இரண்டாவது ஃபேஸ்புக்கில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் விளம்பர நெருக்கடிகளால் அதிலிருந்து மற்றொரு தரப்பு வெளியேறி டிக்டாக் , ஸ்னாப்சாட் செயலிகளுக்குச் செல்கிறார்கள்.

இந்நிலையில் இளம் பயனர்களைத் தக்கவைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வரும் அக்.28-ஆம் தேதி அந்நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறார்.

அதில் ஃபேஸ்புக் பெயர் மாற்றப்படும் என்றும் தொழில்நுட்ப ரீதியாக நிறைய புது அம்சங்களை இன்ஸ்டா , ஃபேஸ்புக் செயலிகளில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் அதிகம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories