வீடு தேடி வந்து உதவி கேட்டு புற்றுநோயாளி ரசிகர்! சிகிச்சை செலவை ஏற்ற நடிகர்!

chiranchivi
chiranchivi

தனது ரசிகரின் புற்றுநோய் சிகிச்சை செலவை நடிகர் சிரஞ்சீவி ஏற்றுக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘ஆச்சார்யா’, மோகன்ராஜா இயக்கத்தில் ‘காட்ஃபாதர்’, மெஹெர் ரமேஷ் இயக்கத்தில் ‘போலா ஷங்கர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (26.10.21) அன்று விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிரஞ்சீவியின் ரசிகரான வெங்கட் என்பவர் சிரஞ்சீவியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சிரஞ்சீவியைச் சந்தித்த அவர் தனக்குப் புற்றுநோய் இருப்பது குறித்தும், அதற்கு சிகிச்சை மேற்கொள்ளப் போதுமான வசதி இல்லை என்றும் அவரிடம் கூறியுள்ளார்.

வெங்கட்டின் நிலையை அறிந்த சிரஞ்சீவி அவருடைய சிகிச்சை செலவுக்குத் தான் உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும், அவருடைய மருத்துவ அறிக்கைகளை வாங்கிப் பார்த்த சிரஞ்சீவி, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு இன்னொரு முறை பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த ரசிகரின் உடனடி சிகிச்சை செலவுக்காக ரூ.2 லட்சத்தையும் சிரஞ்சீவி கொடுத்துள்ளார். வெங்கட்டின் உடல்நிலை குறித்து தொடர்ந்து தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு சிரஞ்சீவி தனது அலுவலக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

சிரஞ்சீவியின் உதவி குறித்து செய்தியாளர்களிடம் வெங்கட் கூறும்போது, ”அவரது ரசிகனாக இருப்பது ஆசிர்வாதம். இந்த ஜென்மத்தில் என்னால் சிரஞ்சீவிக்குப் போதுமான நன்றி தெரிவிக்க இயலாது” என்று தெரிவித்தார்.

பலரும் சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு சிரஞ்சீவிக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories