புதிய வைரஸால் 13 மாணவர்கள் பாதிப்பு!

hospital - 2026

நோரா வைரஸ் என்ற புது வைரஸ் தற்போது இந்தியாவில் தனது பாதிப்பைத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே கொரோனா வைரஸால் ஏற்பட்ட மிகவும் மோசமான பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், புதிய வைரஸ் தொற்று பாதிப்பு கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது

கேரளாவின் வயநாட்டில் பூக்கோடு கிராமத்தில் கால்நடை கல்லூரி மாணவர்கள் 13 பேர் நோரோ வைரஸ் (NoroVirus) பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், அங்கு மற்றுமொரு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நோரா வைரஸ் என்றால் என்ன? அதிலிருந்து எப்படி பாதுகாப்பது? என்ற அடிப்படை விஷயங்களைத் தெரிந்துக் கொண்டால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இந்த புதிய வைரஸ், விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் வைரஸ் என்றும், சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரில் பரவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

பூக்கோடு கிராமத்தில் 13 மாணவர்கள் நோரா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தியிருக்கிறார். விலங்குகளில் இருந்து பரவுவதாக சொல்லப்படும் இந்த வைரஸ், கால்நடை மருத்துவ மாணவர்களை பாதித்திருக்கிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவத் தொடங்கினால், பாதிப்பின் அளவு மிகவும் அதிகமாகும். இந்த வைரஸ் அறிகுறியுடன் மேலும் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோரா வைரஸ்க்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை என்பதால் அச்சம் அதிகரிக்கிறது. துரிதமாக பரவும் தன்மையுள்ள நோரா வைரஸ் பாதிப்பினால், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் இந்த வைரஸ், தாக்கியதில் இருந்து அது 24 முதல் 48 மணி நேரம் மட்டுமே வாழ்ந்தாலும், இரைப்பை மற்றும் குடல் நோயை ஏற்படுத்திவிடும்.

முதியவர்கள், குழந்தைகள், மற்றும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோரா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அச்சம் அதிகரித்துள்ளது. கொரோனாவைப் போலவே, எச்சில் மற்றும் தொடுதல் மூலமாக நோரா வைரஸ் பாதிக்கும் என்பதால், அதிக கவனம் அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

விலங்குகளின் கழிவுகளின்மீது அமரும் கொசுக்கள் மூலமே மனிதர்களுக்கு இந்த வகை வைரஸ் அதிகமாகப் பரவுகிறது. நோரா வைரஸ் பாதித்தவர்களுக்கு, வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைசுற்றுதல், வயிற்று வலி, காய்ச்சல் ஏற்படுகிறது.

வாந்தி, பேதியாகும்போது, உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதால், பாதிக்கப்பட்டவர்கள், திரவ பானத்தை உண்ணவேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு நன்றாக கழுவி பயன்படுத்தவேண்டும். நோய் பாதித்தவர்கள் மூலம், விரைவாக நோரா வைரஸ் பரவும் என்பதால், வாந்தி பேதி போன்ற உடல் நலக்குறைவு ஏற்படுபவர்கள், முடிந்த அளவு தனிமையில் இருப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories