ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலம்! ஏன் தெரியுமா?

pasava
pasava

கர்நாடகாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

வாழும் காலத்தில் அந்த நபர் ஒரு ரூபாய்க்கு மேல் யாரிடமும் யாசகம் பெற்றதே இல்லையாம். அவருக்கு பிச்சையிடுவதால் தங்களுக்கு நல்லது நடக்கும் என அந்த ஊர்க்காரர்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

எல்லோரிடமும் நேசமாக நடந்து கொள்ளும் அந்த பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

கர்நாடகா மாநில பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசவா என்ற ஹச்சா பாஸ்யா (45). இவருக்கு மனநல பாதிப்பு உண்டு. நீண்ட காலமாகவே அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்துவந்த அவர் வருவோர், போவோரிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.

அவர் யாரிடமும் அதிகமாக யாசகம் பெற மாட்டார். ஒரு ரூபாய்க்கு மேல் யார் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொள்ள மாட்டார். எல்லோரையும் அப்பாஜி என அன்பாக அழைப்பார். அந்தப் பகுதி மக்கள் அவருக்கு யாசகம் போடுவதை விருப்பத்துடன் செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்து ஒன்றில் சிக்கி பசாவா உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது இறுதிச் சடங்கை அந்தப் பகுதி மக்களே ஏற்று நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். பசவா என்ற பசவைய்யா அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமல்ல சில அரசியல்வாதிகளுக்கு பரிச்சியப்பட்டிருக்கிறார்.

முன்னாள் துணை முதல்வர் எம்.பி.பிரகாஷ், முன்னாள் அமைச்சர் பரமேஸ்வர நாயக் ஆகியோரிடமும் சகஜமாகப் பேசக் கூடியவர். அமைச்சர் என்றால் என்ன என்ற தொணியில் ரொம்பவே சகஜமாக அதே வேளையில் அப்பாவித்தனத்துடன் பேசுவார்.

அவர்களுமே, பசவாவுக்கு பிச்சையிடுவது தங்களுக்கு நல் வாய்ப்புகளை, ஆசிகளைக் கொண்டு வரும் என நம்பியதாகக் கூறப்படுகிறது.

பசவாவின் அவரது மறைவை ஊடகங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிச்சை எடுத்துதான் பசவா வாழ்ந்தார். ஆனால், மரணம் அவரை ஹீரோவாக்கிவிட்டது. நல்ல செயல்களுக்கு ஒலிப்பெருக்கி தேவையில்லை. நல் ஆத்மா சாந்தியடையட்டும் என்று ஒரு பதிவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்னொருவர், பசவாவின் இறுதிச் சடங்கை மக்களே ஏற்று நடத்தியதன் மூலம் மனிதம் இன்னும் இருக்கிறதை என்பதை நிரூபித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொருவர், பசவாவுக்கு மரியாதை செய்தோருக்கு தலைவணங்குகிறேன். அன்பிற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நமது மனிதநேயம் தான் நமது அடையாளம் என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பிச்சைக்காரர்களை ஒட்டி நாம் பல செய்திகளைப் படித்திருப்போம். பிச்சைக்காரர் படுக்கையின் கீழ் இருந்த ஆயிரக்கணக்கான பணம். பிச்சை பெற்ற காசில் கொரோனா நிதி கொடுத்த முதியவர் என்றெல்லாம் படித்திருப்போம். ஆனால், ஒரு பிச்சைக்காரரின் மறைவுக்கு ஊரே துக்கம் கடைப்பிடித்து, இறுதிச் சடங்கை செய்ததைக் கேட்டிருக்க மாட்டோம்,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories