December 6, 2025, 4:09 AM
24.9 C
Chennai

API பாலிசியில் மாற்றம் செய்த ட்விட்டர்!

twitter
twitter

தனது சமூக வலைதளத்தின் டேட்டாக்களுக்கான ஃப்ரீ அக்சஸை (free access- இலவச அணுகலை) விரிவுபடுத்துவதாக ட்விட்டர் சமீபத்தில் அறிவித்து இருக்கிறது.

தங்களது இந்நடவடிக்கை சாஃப்ட்வேர் டெவலப்பர்களுக்கு பாதுகாப்பான ஆன்லைன் உரையாடல்களை ஊக்குவிக்கும் அல்லது கன்டென்டை கட்டுப்படுத்தும் டூல்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்க உதவும் என்று ட்விட்டர் கூறி இருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்தை பரவலாக்குவதற்கான கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கை யூஸர்கள் தங்கள் ட்விட்டர் ஃபீடில் (Twitter feed) என்ன கன்டென்டை பார்க்கிறார்கள் என்பதில் கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று ட்விட்டரின் டெவலப்பர் தளத்திற்கான தயாரிப்பு தலைவர் அமீர் ஷெவத் கூறி இருக்கிறார்.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட பிற சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் அல்காரிதம்கள் எவ்வாறு சில உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகின்றன மற்றும் தவறான தகவல் அல்லது வெறுப்புப் பேச்சுகளை பரப்புவதில் அவற்றின் பங்கு குறித்து உலகளாவிய ஆய்வுகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன.

எனவே தான் டெவலப்பர்களுக்கான அக்சஸை அதிகரிக்கும் இது போன்ற முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சமூக வலைதளத்தின் டேட்டாக்களுக்கான ஃப்ரீ அக்சஸை விரிவுபடுத்துவதாக ட்விட்டர் கூறி இருப்பதால், டெவலப்பர்கள் ட்விட்டரின் application programming interface (API) மூலம் மாதத்திற்கு சுமார் 2 மில்லியன் ட்வீட்களின் டேட்டாவை எந்தவித கட்டணமும் இல்லாமல் அணுக முடியும். இதற்கேற்ப தங்களது API பாலிசியில் மாற்றம் செய்யப்பட்டு உளளதாக ஷெவத் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் இதுபற்றி ஒரு பேட்டியில் பேசி இருக்கும் அமீர் ஷெவத், ‘ஒவ்வொருவரும் தங்களின் விருப்பங்களை வரையறுத்து, அவர்களுக்கேற்றவாறு சரிசெய்யப்பட்ட கன்டென்ட்களை வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

டெவலப்பர்கள் இதில் இருந்தால் மட்டுமே எங்களால இதை சாத்தியமாக்க முடியும் என்றார். ட்விட்டர் டேட்டாவை கொண்டு உருவாக்கப்பட்ட ஆப்ஸ்களுக்கு எடுத்துக்காட்டாக சொல்வதென்றால் Block Party-ஐ குறிப்பிடலாம். இது சாஃப்ட்வேர் இன்ஜினியர் ட்ரேசி சோ (Tracy Chou) என்பவரால் டிசைன் செய்யப்பட்டது.

ட்விட்டர் யூஸர்கள் தாங்கள் பார்க்க விரும்பாத கன்டென்டை ஃபில்ட்டர் செய்ய இந்த Block Party ஆப் உதவுகிறது. இதே போல ட்விட்டர் டேட்டாவை கொண்டு சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஜானிக்-கா ஜான் (Janique-ka John) என்பவரால் உருவாக்கப்பட்ட மற்றொரு ஆப், நிறுவனத்தின் லைவ் ஆடியோ சேட் (live audio chat) அம்சமான ட்விட்டர் ஸ்பேஸஸை (Twitter Spaces) மிக எளிதாக தேட யூஸர்களை அனுமதிக்கிறது. ட்விட்டர் அதன் API கொள்கையை மாற்றியுள்ளது டெவலப்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories