வழிவிடாத ஆத்திரத்தில்… அரசுப் பேருந்து ஓட்டுநரை ‘வெட்டிய’ விவகாரம்: கார் ஓட்டுநர் கைது!

car driver arrested attacking bus driver
car driver arrested attacking bus driver

அரசுப் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசுகார்- வழிவிடாத ஆத்திரத்தில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் கைது; காவல்துறை விசாரணை

மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து  மதுரை காளவாசல் கோச்சடை வழியாக திருப்பூர் செல்வதற்காக  காளவாசலை அடுத்த பாண்டியன் பல்பொருள் கூட்டுறவு அங்காடி முன்பு பேருந்து சென்ற போது, பின்னால் வந்த இனோவா சொகுசு கார் விரைவாக செல்வதற்கு பலமுறை ஒலி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால், பேருந்து மெதுவாகச் சென்றது. இந்த நிலையில் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற இன்னோவா காரில் வந்த நபர் பேருந்தை வழிமறித்து வழிவிடாத ஆத்திரத்தில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் முத்துகிருஷ்ணனை தாக்கியதோடு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தரக்குறைவாக பேசியுள்ளனர். 

இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்து, அதனை செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து அடுத்தடுத்த பேருந்துகளில் வந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஒன்று கூடி காரை ஓட்டி வந்த நபர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களும் ஒன்று கூடி காரை ஓட்டி வந்த நபர்களிடம் வாக்குவாதம் செய்த நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த அந்த நபர் காரில் ஏறி உடனடியாக தப்பித்துச் சென்றார். 

இந்தச் சம்பவம் குறித்து, எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்களை தேடி வந்தனர்.

தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் அந்த வாகனத்தின் உரிமையாளர் பற்றிய விவரம் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த வாகனத்தை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநரான சுரேஷ் (வயது 36) என்பவர் ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீசார்  ஓட்டுநர் சுரேஷைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories