பெருங்குடி கண்மாயில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டெடுப்பு!

Inscription
Inscription

மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கண்மாயில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை பெருங்குடி பெரிய கண்மாய் அருகே கல்வெட்டு இருப்பதாக முதுகலை வரலாற்றுத்துறை மாணவர் சூரியபிரகாஷ் தகவல் அளித்தார்.

அதன்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் து.முனீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் லட்சுமணமூர்த்தி, ஆதிபெருமாள்சாமி ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.

ஆலமரத்து விநாயகர் கோயில் அருகே குத்துக்கால் பாதி புதைந்த நிலையில் கல்வெட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்ததில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு எனக் கண்டறியப்பட்டது.

இதுகுறித்துப் பேராசிரியர்கள் முனீஸ்வரன், லட்சுமணமூர்த்தி ஆகியோர் கூறும்போது, ”வேளாண்மை, மண்பாண்டத் தொழிலில் சிறந்து விளங்கிய பெருங்குடியில் பெரிய கண்மாய் ஆலமரத்து விநாயகர் கோயில் எதிரே கல்தூண் உள்ளது.

அவை மண்ணில் புதைந்த நிலையில் 5 அடி நீளக் கல் தூணில் எட்டுக்கோணம், 2 பட்டை வடிவத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.

Inscription1
Inscription1

மதுரை பெருங்குடி பெரிய கண்மாயில் உள்ள கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு.
தூணின் மேல் பகுதிப் பட்டையில் 3 பக்கம் நில அளவைக் குறியீடுகள், மற்றொரு பக்கம் திருமாலின் வாமன அவதாரக் குறியீடும் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது.

நிலத்தை வைணவக் கோயிலுக்கு நிலக்கொடையாகக் கொடுத்ததைச் சுட்டிக் காட்டுகிறது. கல்தூணின் கீழ்பட்டைப் பகுதியில் 12 வரிகள் உள்ள எழுத்தமைதியின் வடிவத்தை வைத்து கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பல எழுத்துகள் தேய்மானமடைந்ததால் முழுப் பொருள் அறிய முடியவில்லை. தொல்லியலாளர் சொ.சாந்தலிங்கத்தின் உதவியுடன் கல்வெட்டு படிக்கப்பட்டதில், விக்கிரம பாண்டியன் பேரரையான் என்ற சிற்றரசன் இப்பகுதியை ஆட்சி செய்ததாகவும், அப்போது நிலதானம் வழங்கியவரையும், ஆவணமாக எழுதிக்கொடுத்த குமராஜன் என்பவரின் பெயரும் கல்வெட்டு இறுதி வரியில் இருப்பதை அறிய முடிகிறது” என்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories