
நேற்றைய தினம் பங்கு சந்தையில் ஆட்டம் கண்ட க்ரிப்டோ கரன்ஸி. பலருக்கும் இதில் குழப்பம் நீடிக்கிறது…. இந்தியாவில் இதனை தடை செய்ய போகிறார்களா….. அல்லது கட்டுப்படுத்த போகிறார்களா….. என்பது தான் அந்த குழப்பம்.
இரண்டுமே தான்.
அதாவது அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு வரையறை செய்து பயன் படுத்த உத்தேசித்து இருக்கிறார்கள்…. அது போலவே புற்றீசல் போல முளைத்து இருக்கும் இந்த க்ரிப்டோ கரன்ஸிகளை தடை செய்ய போகிறார்கள். கிட்டத்தட்ட இந்தியாவில் மாத்திரமே சுமார் 5300 பெயர்களில் க்ரிப்டோ கரன்ஸிகள் வெவ்வேறான போலி பெயர்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது.
நம் ஊரில் ஒரு காலத்தில் புகழ் பெற்ற பிஸ்லரி வாட்டர் பெயரில் சிற்சில மாற்றங்கள் செய்து விற்பனைக்கு விட்டு கொள்ளை லாபம் பார்த்தார்கள் அல்லவா….. அதே போன்றதொரு பாணியில் தற்போது இது நடைமுறை படுத்தப்படுகிறது.
இது ஏதோ இங்கு இந்தியாவில் மாத்திரமே அல்ல….. உலகளவில் இதே கதை தான். உதாரணமாக ஒன்று பாருங்கள்…. சமீப காலத்தில் நெட்பிளிக்ஸ் வலைதளத்தில் வெளிவந்த ஒரு இணைய தொடர் க்விட் கேம் சக்கைபோடு போட்டது. தென்கொரியா படமான இது இணையத்தில் விளையாட்டாகவும் மிகப் பிரபலமானது. இதில் பயன் படுத்தப்பட்ட பொருட்களின் மாதிரியில் தயாரான விளையாட்டு சாதனங்களை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள்.
உடைகள்…. மாஸ்க்குகள்…… காலணிகள்…. கையுறைகள்….. பற்பல வெளிவந்தது…. எதனையும் விட்டு வைக்கவில்லை…. அனைத்துமே சக்கை போடு போட்டது.
இதன் வர்த்தக மதிப்பு மட்டுமே இருபத்தியோராம் கோடி ரூபாய் அளவிற்கு இருந்ததாக சொல்கிறார்கள்.
விட்டு விடுவார்களா? க்விட் கேம் க்ரிப்டோ கரன்ஸி வெளியானது…. அவ்வளவு தான் பலரும் முட்டி மோதி வாங்க ஆரம்பித்தார்கள். நாற்பத்தி ஏழாயிரம் கோடி ரூபாய் மூன்று நாட்களில் தொட்டது…. நான்காம் நாள் மறைந்து போனது. காணாமல் போய் விட்டார்கள்……. நம் ஊர் சிட் ஃபண்ட் காரர்கள் போல…… ஒரு விளம்பரம் இல்லை…… வர்த்தக நிறுவன பதிவு இல்லை….. பெயர் மட்டுமே மூலதனம்… ஏமாற்ற அது போதும். அவ்வளவு தான் அவர்களின் தாரக மந்திரமாகவே இருந்திருக்கிறது. இது எதுவுமே அந்த தொடரை தயாரித்த… வெளியிட்ட யாருக்குமே தெரியவில்லை என்பது தான் இதில் உள்ள நகைமுரண். சரியாக சொன்னால் அவர்கள் சம்பாதித்ததை காட்டிலும் இந்த பெயரில் வெளியான க்ரிப்டோ கரன்ஸி சுருட்டல் பதினோரு மடங்கு அதிகம் என அதிர்ச்சியளிக்கிறார்கள்.
இதேபோன்ற சமாச்சாரம் போல ஒன்று நம் தமிழகத்தில் அதிக அளவில் சமீபத்திய காலத்தில் அதிகரித்து வருகிறது என்கிறார்கள்.
இங்கு பலருக்கும் க்ரிப்டோ கரன்ஸி என்றால் அது ஃபிட் காயின் மாத்திரமே என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்….. அது தவறு. எப்படி நகல் எடுக்கும் இயந்திரத்தை ஜெராக்ஸ் என்பவரின் பெயரில் தெரிந்து வைத்திருக்கிறோமோ அது போலவே தான் இதுவும்.
க்ரிப்டோ கரன்ஸி கொண்டு நிலம் வாங்குவதாக….. நிறுவனங்களில் முதலீடு செய்து தருவதாக….. வாகனங்களை வாங்கி தருவதாக…… வருமான வரி கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்பதாக…. கணக்கில் கொண்டு வர வேண்டிய தேவையில்லை என்பதாக…… பலரும் பல இடங்களில் இருந்து கிளம்பி இருக்கிறார்கள்…… பிஸ்லரி வாட்டர் போல் பல போலியானவர்கள் தான் இதில் அதிகம் காணப்படுகிறார்கள்…….. இதனை முற்றிலுமாக தடை செய்யப் போகிறது நம் மத்திய அரசு.
உலக அளவில் ஸ்திரமான முதலீட்டு திட்டங்களை கொண்டு இருக்கும் சில க்ரிப்டோ கரன்ஸிகளை மாத்திரம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வரையறை செய்ய இருக்கிறார்கள்…. இதன் மீது தடை விதிக்காமல் அதேசமயம் இதனை இந்தியாவில் நடைமுறை படுத்த…. நம் இந்திய சட்டதிட்டங்களை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்த போகிறார்கள்.
இது போக இந்தியாவில் டிஜிட்டல் கரன்ஸி கொண்டு வர உத்தேசித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக மொத்தத்தில்….
இவையனைத்தையும் தனித்தனியாக பிரித்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் இந்திய அரசு நிர்வாகம் போட்டு குழப்புவதாக இங்கு உள்ள சில கூறு கெட்ட கூபைகள் கதை விட ஆரம்பித்து விடும். ஏற்கனவே அப்படி தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பதற்கும் மேற்பட்ட யூட்யூப் வீடியோக்களில் விளையாட்டு காட்டி கொண்டு இருக்கிறார்கள்.
தரமான சில…….. தமிழ் பொக்கிஷம் போன்றவை மாத்திரமே உண்மையான செய்திகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
வரும் 29 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தில் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று சட்டம் இயற்ற தயாராகி வருகிறது நம் இந்திய அரசு நிர்வாகம்.
நம் நாட்டின் வளங்களை….. வர்த்தகத்தை….. நிலையான செல்வங்களை பாதுகாப்பான வழிகளில் பிரயோஜனமான விதங்களில் பயன் படுத்த இந்த சட்டம் அத்தியாவசிய அவசியம் ஆகிறது என்பது நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
– ஸ்ரீ ராம்