டிசம்பரில் பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்! அரிய நிகழ்வு!

comet 1 - 2026

நம் பூமியின் வழியில் இப்போது ஒரு வால் நட்சத்திரம் வருகிறது. இந்த காஸ்மிக் பொருள், இந்த ஆண்டு மட்டுமே காணக்கூடிய வாய்ப்பாக அமைகிறது.

இந்த வால்மீனின் வரவிருக்கும் வருகையானது சுமார் 70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியுடன் அதன் முதல் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துகிறது. பூமி மக்கள் இதை வெறும் கண்களால் பார்க்க முடியும்.

மவுண்ட் லெமன் ஆய்வகத்தில் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரிகோரி ஜே. லியோனார்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வால் நட்சத்திரத்திற்கு சி/2021 ஏ1 லியோனார்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வால் நட்சத்திரம் எப்போது பூமிக்கு மிக அருகில் வருகிறது, இதை மக்கள் எந்த திசை வானில் பார்வையிடலாம், எந்த நேரத்திலும் இதை மக்கள் தெளிவாக வெறும் கண்களில் பார்க்கலாம்

தற்போதைய கணிப்புகளின் படி, இந்த வால் நட்சத்திரம் டிசம்பர் மாதத்தில் பூமியைக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் உள்ள பல இடங்களில் இந்த வால் நட்சத்திரத்தை மக்கள் வெறும் கண்களில் காணலாம்.

comet - 2026

ஆனால், தில்லி வாசிகளுக்கு இந்த வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. டெல்லியில் உள்ள மாசுபாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் ஒரு நட்சத்திரத்தைக் கூட பார்க்க இயலாது. பூமியில் உள்ள மற்ற மக்கள் அனைவரும் இந்த விஷயத்தில் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் தான்.

காரணம், உங்கள் வாழ்வில் ஒரு முறை மட்டுமே இந்த வால் நட்சத்திரத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கப் போகிறது. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, அநேகமாக இந்த வால் நட்சத்திரம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 16 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தெளிவான வால் நட்சத்திரம் மக்களின் கண்ணுக்கும் நன்றாகத் தெரியும். உச்சக்கட்டத் தெரிவு வரும் டிசம்பர் 13 ஆம் தேதி அன்று நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் வடக்கு அரைக்கோளத்தில் இருந்தால், தெற்குப் பகுதியில் உள்ள மேல் வானில் இந்த வால் நட்சத்திரத்தை நீங்கள் காண்பீர்கள். பூமியில் வாழும் மனிதர்களுக்கு வால் நட்சத்திரத்தின் அரிதான தோற்றம் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையின் காரணமாகும்.

பூமியில் இப்போது உயிருடன் இருக்கும் எவருக்கும் அடுத்து இந்த அரிய வால் நட்சத்திரத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அது உள் சூரிய மண்டலத்தில் நுழைந்தவுடன், சூரியனின் ஈர்ப்பு அதை மீண்டும் ஆழமான விண்வெளியில் கொண்டு சென்று பறக்கவிட்டுவிடும்.

அங்கு அது நீண்ட காலம் பயணத்தில் இருக்கும். இங்கு நீண்ட காலம் என்பது சில பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வால் நட்சத்திரம் பூமி நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதன் பயணம் நீடிக்க – நீடிக்க இதன் பிரகாசம் அதிகமாகி வருகிறது. ஸ்கை அட் நைட் உடனான உரையாடலில், வால்மீன் ஆர்வலர் ஜோஸ் ஜே. சாம்போ கூறுகையில், அக்டோபரில் ஓரிரு வாரங்களில் வால்மீனின் பிரகாசம் “வியத்தகு” அதிகரிப்பைக் கண்டதாகக் கூறியுள்ளார். இது மிகவும் வேகமான வேகத்தில் உள் அமைப்பை நோக்கி வீசுவதைக் குறிக்கிறது.

அதிர்ஷ்டவசமாக, வால்மீன் நமது கிரகத்திற்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பூமியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஒரு வேலை இது நேராக பூமியை நோக்கி வந்திருந்தாள் என்னவாகியிருக்கும் என்று யோசித்தால், நிச்சயமாக நம்மால் அதிக அளவில் எதுவுமே செய்ய முடிந்திருக்காது என்பது தான் உண்மை.

நிச்சயமாக அப்படியான சூழலில் பூமி ஆபத்தை மட்டுமே சந்தித்திருக்கும். இப்படியான சிக்கல்களை எதிர்கொள்ள நாசா இப்போது புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

பூமி நோக்கி வரும் பெரிய சிறுகோள் மற்றும் ஆபத்தான விண்கற்களைத் திசை திருப்பவும், அவற்றை செயற்கைக்கோள் மூலம் தாக்குதல் நடத்தி அழிக்கவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories