திருமண ஊர்வலத்தில் பற்றிய தீ! அதிர்ச்சி வீடியோ!

Published:

fire - 2026

இந்திய திருமணங்களில் மாப்பிள்ளை ஊர்வலம் மிகவும் கோலாகலமாக நடைபெறும். வட மாநிலங்களில் இதனை பராத் என அழைப்பார்கள்.

இதில் மாப்பிள்ளை ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட குதிரை அல்லது குதிரை வண்டியில் வருவார்கள்.

அந்த வகையில், குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் நடந்த திருமணம் ஒன்றில், திருமண மண்டபத்தை நோக்கி மாப்பிள்ளை ஊர்வலம் சென்ற போது, மாப்பிள்ளை ஊர்வலமாக வந்த குதிரை வண்டி தீ பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மணமகன் இருக்கும் போதே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) வைரலாகி வருகிறது. குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் திருமண அரங்கை நோக்கி பாரத் ஒன்று சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருமண ஊர்வலத்தின் போது மக்கள் பட்டாசு வெடித்து நடனமாடினர். தீப்பிடித்த குதிரை வண்டியில் சில பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், பட்டாசு வெடிக்கும் போது, வண்டியில் உள்ள பட்டாசுகள் வெடித்து தீ பிடித்துக் கொண்டது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

மணமகன் சிறிது நேரத்தில் தப்பித்து, வண்டி தீப்பிடித்து எரியும் கொண்டிருக்கும் போது அதில் இருந்து குதிப்பதை வீடியோவில் காணலாம். அதிர்ஷ்டவசமாக அவர் பாதுகாப்பாக வண்டியில் இருந்து இறங்கினார், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருமண ஊர்வலத்தில் இருந்தவர்களும் மற்றவர்களும் தீயை அணைக்க உதவுவதை வீடியோவில் காணலாம். பின்னர் அருகில் உள்ள கடைகளில் இருந்து தீயணைப்பு கருவிகள் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்தனர்.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

Related articles

Recent articles

spot_img