calf with six legs - 2026

6 கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
calf with six legs - 2026

புதுச்சேரி மாநிலம் வாதானூர் பகுதியில் கூலி வேலை செய்து வரும் ஜெயப்பிரகாஷ் என்பவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வளர்த்த பசு மாடுகளில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் கன்று ஒன்றை ஈன்றது.

இந்த கன்று வழக்கத்தை விட அதிசயமான வகையில் வயிற்றுப்பகுதியில் அதிகபடியான இரண்டு கால்கள் கொண்டு மொத்தம் 6 கால்களுடன் பிறந்துள்ளது.

6 காலுடன் பிறந்துள்ள அதிசய கன்றை காண பொதுமக்கள் விவசாயி வீட்டில் குவிந்து வருகின்றனர்.

இது போன்ற மாறுதல்களுடன் பிறக்கும் கன்று குட்டிகள், மற்ற கன்று குட்டிகளை போல அதிக நாட்கள் வாழ்வதில்லை. 6 கால்களுடன் பிறந்துள்ள இந்த கன்று தற்போது வரை ஆரோக்கியத்துடன் இருப்பதாக அந்த பசுவின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.