robo 1 - 2026

சிறுவனுக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
robo 1 - 2026

சிறுவனுக்காக பள்ளிக்கு செல்லும் ரோபோ. ஜெர்மன் நாட்டில் 7 வயது சிறுவனுக்காக ரோபோ ஒன்று பள்ளிக்கூடம் செல்லும் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த சிறுவன் ஜோசுவா மார்டிங்லி (7) கடுமையான உடல்நலப் பாதிப்பால் அவதியுற்று வந்துள்ளான்.

இந்த சிறுவன் கடுமையான நுரையீரல் பாதிப்பு காரணமாக, கழுத்தில் குழாய் இணைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதனால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது தாய் சிமோனி கூறியுள்ளார்.

இதனால் அவர் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக அவதார் என்ற ரோபோ, பள்ளிக்குச் சென்று, அவன் வீட்டிலிருந்து பாடம் படிக்க உதவி செய்து வருகிறது.

robo - 2026

இந்த ரோபோ மூலம் தனது ஆசிரியர் மற்றும் வகுப்பு தோழர்களுடன் ஜோசுவா தொடர்பு கொள்ள உதவி புரிகின்றது. ஜோசுவா அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு பாடங்களை கவனிக்கும் ரோபோ, ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஜோசுவா பதிலளிக்க உதவுகிறது.

வீட்டிலிருந்தே ஜோசுவா தனது பாடங்களை படித்து வருகிறான். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.