5 வருடம் சும்மா எடுத்து குவித்த செல்ஃபி.. 5 நாளில் கோடீஸ்வரரான இளைஞர்!

Published:

ghozali - 2026

மலேசியாவில் பொழுதுபோக்காக தான் எடுத்த செல்பி புகைப்படங்கள் மூலம் வெறும் 5 நாளில் இளைஞர் ஒருவர் கோடீஸ்வரராக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோஞ்சாலி என்ற 22 வயதான இளைஞர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது கணினி முன்னால் நின்று கொண்டு போட்டோ எடுத்து வந்தார். ஒரு வீடியோவாக தயார் செய்ய இவ்வாறு செல்பி புகைப்படங்களை அவர் எடுத்து வந்திருக்கிறார்.

விளையாட்டாகவும், ஒரு பொழுதுபோக்காகவும் கோஞ்சாலி எடுத்து வந்த செல்பிக்கள் அவரை பின்னாளில் கோடீஸ்வரர் ஆக்கும் என அவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.

இப்போது, ​​ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது புகைப்படங்களை NFT ஆக மாற்றிய பிறகு அது லட்சங்களில் விற்கப்படுகின்றன.

NFT என்றால் Non-Fungible Token என அர்த்தமாகும். அதாவது NFT என்பது அடிப்படையில் டிஜிட்டல் லெட்ஜரில் சேமிக்கப்படும் தகவல்தான்.

ஆனால், அத்தகவல் நிஜத்தில் ஏதோவொரு சொத்தின் பிரதிநிதியாக உள்ளது. ஏதேனும் இசை, ஓவியம், புகைப்படம் போன்ற கலைப்படைப்புகளுக்கு NFT இருக்கலாம்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

அந்த வகையில் தான் கோஞ்சாலியின் புகைப்படங்கள் பலரால் விலைக்கு வாங்கப்பட்டது. இதன்மூலம் வெறும் ஐந்து நாளில் அவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

கோஞ்சாலி கூறுகையில், என் புகைப்படங்களை நீங்கள் புரட்டுவது அல்லது எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தயவு செய்து எனது புகைப்படங்களை தவறாக பயன்படுத்தாதீர்கள்.

நான் உங்களை நம்புகிறேன் எனவே தயவுசெய்து எனது புகைப்படங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

கோஞ்சாலியின் செல்ஃபிக்களை விற்பனை செய்வதில் பிரபலங்கள் பெரிதும் உதவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் பல பிரபலங்களால் அவரது படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன.

Related articles

Recent articles

spot_img