555 கேரட், 55 முகங்கள்.. ரூ.37 கோடி.. இயற்கையான கருப்பு வைரம்!

black diamond - 2026

தி எனிக்மா என்று பெயரிட்டுள்ள இந்த அரிய ரத்தினம் விண்வெளியில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. விண்கல் பூமியில் மோதி படிந்து அதன் மூலம் இந்த வைரம் உருவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த அளவில் கிடைக்கும் இயற்கையான வைரம் மிகவும் அரிதானது என கூறப்படுகிறது. உலகின் மிகவும் அரியவகை கருப்பு நிற வைரம் தற்போது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருப்பதோடு விரைவில் ஏலத்திற்கும் வர இருக்கிறது.

விண்கல் பூமியில் மோதி உருவானதாக கூறப்படும் தி எனிக்மா என்ற 555.55 காரட் அரியவகை கருப்பு வைரம் ஆன்லைன் மூலம் ஏலத்திற்கு விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையாக உருவான இந்த கருப்பு நிற வைரக்கல் ஆனது மிகப் பெரிய அளவில் இருக்கிறது. இது லண்டனில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. இது 6.8 மில்லியன் டாலர் வரை ஏலத்தில் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

555 கேரட் எடையுள்ள இந்த வைரமான கருப்பு நிறத்தில் இயற்கையாகவே பெரிதாக இருக்கிறது. இந்த வைரமானது சுமார் 260 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் அல்லது சிறுகோள் பூமியில் மோதி இருக்கலாம் எனவும் அதன்மூலம் இந்த வைரம் உருவாகி இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எக்னிமா என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரமானது குறிப்பிட்ட நாட்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது. இந்த வைரமானது லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது.

இதன்பின் இந்த வைரம் அதாவது பிப்ரவரி 3 ஆம் தேதி ஆன்லைன் மூலம் ஏலத்திற்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கார்பனாடோ வைரங்கள் என்றும் அழைக்கப்படும் இந்த கருப்பு வைரங்கள் ஆனது பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு படிந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

விண்கல் மோதி உருவான வைரம்
இது விண்கல் மோதி இந்த வைரம் உருவாகி இருக்கலாம் என குறிப்பிட காரணம், இதில் நைட்ரோஜன் மற்றும் ஹைட்ரோஜனின் சுவடு அளவைக் கொண்டிருக்கின்றன, அதேபோல் விண்மீன் இடைவெளியில் காணப்படும் தனிமங்கள், விண்கற்களில் இருக்கும் ஆஸ்போர்னைட் என்ற கனிமமும் இவற்றில் காணப்படுகிறது.

லண்டனில் உள்ள சோதேபியின் நகை நிபுணர் நிகிதா பினானி தனியார் தளத்திற்கு அளித்த தகவலில் இந்த வைரத்தை “ஒரு உண்மையான இயற்கை நிகழ்வு” என குறிப்பிட்டார்.

மனித குலத்திற்கு தெரிந்த பில்லியன் ஆண்டுகள் பழமையான அரிய அதிசயங்களில் இதுவும் ஒன்று என இதை குறிப்பிடப்படுகிறது.

இந்த வைரமானது 55 முகங்கள் கொண்டதாக இருக்கிறது. இந்த வைரத்தின் இந்திய மதிப்பு சுமார் ரூ.37 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த வைரக்கல்லில் ஐந்து என்ற தீம் சுற்றி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 555.55 காரட்களுடன் இருக்கிறது எனவும் இது சரியாக 55 முகங்கள் கொண்டிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

இந்த வைரக்கல் முன்னதாக யாரிடம் இருந்தது என்ற தகவல் இல்லை, ஆனால் இந்த வைரத்தில் சோதேபி ஸ்டீபன் என்பவர் ஏலம் விடுகிறார். இயற்கையாக உருவான கருப்பு நிற வைரக்கல் என்பது மிகவும் அரிய வகையாகும்.

அதுவும் இது சிறுகோள் மோதி உறுவானது என கூறப்படுகிறது. இந்த வைரமானது பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்பட இருக்கிறது. முன்னதாக தி கீ 10138 என்று அழைக்கப்படும் 101 காரட் வைரத்தின் விற்பனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரம் கடந்த ஆண்டு விற்கப்பட்ட போது கிரிப்டோகரன்சி மூலம் வாங்கப்பட்ட மிக விலை உயர்ந்த நகையாக மாறியது. இந்த வைரக்கல் ஆனதும் கிரிப்டோகரன்சி உடன் விற்கப்பட இருக்கிறது. பல ஏல நிறுவனங்களும் பெரிய விலை பொருட்களுக்கு கிரிப்டோகரன்சிகளை வரவேற்கத் தயாராகி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories