rudratcham - 2026

சிம்ஸ் பூங்காவில் ருத்ராட்ச சீசன்: விற்பனை அபாரம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
rudratcham - 2026

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்ச மரங்களில் அதிகமாக காய்கள் காய்த்துள்ளன.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த அரிய வகை மரங்கள் உள்ளன.

குறிப்பாக யானைக்கால் மரம், காகித மரம் உள்பட 100க்கும் மேற்பட்ட அரிய வகையான மரங்கள் உள்ளன.

இமயமலை, நேபாளத்தில் மட்டுமே காணப்படும் அரிய வகையான ருத்ராட்ச மரம், தென் மாநிலங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மட்டுமே காணப்படுகிறது.

ருத்ராட்ச சீசன் ஆரம்பம்
ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இதன் சீசன் காலம். சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் மரத்தில் இருந்து விழுந்து கிடக்கும் காய்களை ஆர்வத்துடன் எடுத்துச் செல்கின்றனர்.

மேலும் உள்ளூர் வாசிகள் இந்த ருத்ராட்ச காய்களை சிம்ஸ் பூங்காவின் நுழைவு வாயில்களில் விற்பனை செய்து வருகின்றனர். ஐந்து முகம் கொண்ட ருத்ராட்ச காய்கள் இந்த ஆண்டு வழக்கத்திற்கு விட அதிகளவில் காய்த்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.