செங்கோட்டையில் திமுக வர்த்தக அணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு கொரானா நிவாரண உதவிகள் வழங்கல்!
செங்கோட்டையில் திமுக வர்த்தக அணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கொரானா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் வறுமையில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திமுக மாநில வர்த்தக அணியின் துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன் தனது சொந்த செலவில் திருநெல்வேலி தென்காசி, மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஒன்றிய நகர பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுநர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தனது சொந்த செலவில் நாள்தோறும் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்,
- டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!
- பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
- டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!
இந்த நிலையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் திமுக வர்த்தக அணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திமுக வர்த்தக அணி மாநில துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன் கலந்து கொண்டு ஆட்டோ தொழிலாளர்கள் 250 பேருக்கு தலா 500 வீதம் நிதியுதவி வழங்கினார்.
இதனை தொடர்ந்து கதிரவன் காலனி, மூன்று வாய்க்கால், கண்ணுபுளி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1500 ஏழை எளிய குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை நகரச் செயலாளர் ரஹீம், ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் ஜெயராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஹக்கீம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடை பிடித்தும், முக கவசம் அணிந்தும் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.