சீசனல் ஃபுட்: நொடியில் செய்யலாம் குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும் இது! சேமியா மாம்பழ கீர்!

Published:

mango vermicelli kheer 1 - 2026

சேமியா – மாம்பழ கீர்

தேவையானவை:
வறுத்த சேமியா – கால் கப்,
மாம்பழம் – ஒன்று,
பால் – அரை லிட்டர்,
சர்க்கரை – கால் கப்.

செய்முறை:

வறுத்த சேமியாவை பாலில் நன்கு வேக விடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மாம்பழத்தை பாதியாக வெட்டி, ஒரு பாதியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பால் – சேமியாக் கலவையை ஆற வைத்து, அரைத்த மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்கி, நறுக்கிய மாம்பழத் துண்டுகளை மேலே போட்டு, ‘ஜில்ஜில்’ என்று பரிமாறவும்.

விருந்தினர்களையும் குழந்தைகளையும் அசத்தும் அட்டகாசமான கீர் இது!

Related articles

Recent articles

spot_img